எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு கொடுக்க கூடியிருந்த அதிமுகவினர்... நடு ரோட்டில் முட்டி மோதிய கொண்ட இரு கோஷ்டிக்கள்!!

 
Virudhunagar-ADMK

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க கூடியிருந்த அதிமுகவினர் இடையே கைகலப்பு உருவானது.

தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9-ந் தேதிகளில் என 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

அதன்படி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து எடப்பாடி பழனிசாமி புறப்பட்ட பிறகு, விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரனின் ஆதரவாளர்கள் சிலர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், இருதரப்பினர் இடையே மோதல் உருவானது.

போலீசார் முன்பே இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால், பதற்றம் ஏற்பட்டது. பின்னர், போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

From around the web