அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் உடல்நலக்குறைவால் காலமானார்!

 
அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் உடல்நலக்குறைவால் காலமானார்!

அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91.

அதிமுக முன்னாள் அமைச்சர் செ.அரங்கநாயகம் உடல்மூப்பு காரணமாக சில காலமாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு, இவருக்கு மூச்சுத்திணறல் இருந்துள்ளது. எனவே, சென்னை கிண்டியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து சிகிக்சையும் பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அரங்கநாயகம் காலமானார். அதிமுகவின் மிக முக்கிய தலைவர்களில் மிக முக்கியமானவர் அரங்கநாயகம். அரங்கநாயகம் , தமிழக சட்டமன்றத்துக்கு 4 முறை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இரண்டு முறை தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்தும், இரண்டு முறை கோவை மேற்குத் தொகுதியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் எம்.ஜிஆர் அமைச்சரவையிலும், அதைதொடர்ந்து ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் கல்வியமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார்.

அரங்கநாயகத்தின் மறைவு, அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இதையடுத்து அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் தங்கள் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

From around the web