முதல் நாளிலேயே வேளான் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்

 
DMK-meeting-in-party-office

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தின் முதல் நாளிலே வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என திமுக எம்.பி.க்.கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 29-ந் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், திமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

DMK

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தின் முதல் நாளிலே வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என திமுக எம்.பி.க்.கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் நிரந்தர விலக்கு வடகிழக்கு பருவமழை வெள்ள பாதிப்பினால் ஏற்பட்ட பகுதிகளுக்கு வெள்ள நிவாரணம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்புவது தொடர்பாகவும் தமிழக நலன் சார்ந்த விஷயங்கள் தொடர்பாகவும் ஆலோசிக்கபட்டன.

மேலும் வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் உயிர்நீத்த 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு திமுக எம்.பி.க்.கள் சார்பில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

From around the web