10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி... அசுரபலத்துடன் தட்டித்தூக்கும் ஸ்டாலின்... எக்ஸிட் போல் முழு விவரம்!

 
10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி... அசுரபலத்துடன் தட்டித்தூக்கும் ஸ்டாலின்... எக்ஸிட் போல் முழு விவரம்!

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 6-ந் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக கூட்டணி களம் காண்கிறது. நாம் தமிழர் தனியாக களம் இறங்கியுள்ளது.

மொத்தம் 234 தொகுதிகளை கொண்ட தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க 118 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். ஏற்கனவே தேர்தல் முந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும் ஒரு சில இடங்களில் கடும் போட்டி இருக்கும் என்று கூறியுள்ளது.

இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நேற்று வெளியிடப்பட்டன. இது தொடர்பான முழு விவரம் பின்வருமாறு,

டுடேஸ் சாணக்யா: திமுக கூட்டணி: 164 - 186, அதிமுக கூட்டணி: 46 - 68, அமமுக கூட்டணி: 0

இந்தியா டுடே: திமுக கூட்டணி: 175 - 195, அதிமுக கூட்டணி: 38 - 54, அமமுக கூட்டணி: 1 - 2, மநீம கூட்டணி: 0 - 2

இந்தியா அஹெட் டிவி: திமுக கூட்டணி: 165 - 190, அதிமுக கூட்டணி: 40 - 65, அமமுக கூட்டணி: 1 - 3, மநீம கூட்டணி: 1 - 3, பிற - 0 - 3

ரிபப்ளிக் சேனல்-சி.என்.எக்ஸ்: திமுக கூட்டணி: 160 - 170, அதிமுக கூட்டணி: 58 - 68, அமமுக கூட்டணி: 4 - 6, மநீம கூட்டணி: 0 - 2

சி வோட்டர்ஸ்-ஏ.பி.பி சேனல்: திமுக கூட்டணி: 160 - 172, அதிமுக கூட்டணி: 58 - 70, அமமுக கூட்டணி: 0 - 4, மநீம கூட்டணி: 0

தந்தி டிவி: திமுக கூட்டணி - 133, அதிமுக கூட்டணி - 68, கடும் போட்டி உள்ள தொகுதிகள் - 33, பாஜக - 0

ஜன்கிபாத்: திமுக கூட்டணி: 110-130, அதிமுக 102-123, இதர கட்சிகள் 2-1

நேற்று இரவு வெளியிட்டுள்ள பெரும்பாலான கருத்து கணிப்புகளில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பார் என்று கூறியுள்ளன. இருந்த போதிலும் தமிழகத்தில் மீண்டும் அரியணையில் அமர போவது யார்? என்பது மே 2-ம் தேதி தெரிந்து விடும்.

From around the web