ஆயிரம் விளக்கு தொகுதியில் 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நடிகை குஷ்பூ படுதோல்வி!!

 
ஆயிரம் விளக்கு தொகுதியில் 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நடிகை குஷ்பூ படுதோல்வி!!

பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகை குஷ்பூ  படுதோல்வி அடைந்துள்ளார். எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலனை விட 33 ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளார்.

நடிகை குஷ்பூவுக்கு 38 ஆயிரத்து 493 வாக்குகளும், மருத்துவர் எழிலனுக்கு 71 ஆயிரத்து 537 வாக்குகளும் கிடைத்துள்ளது. முதலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட ஆயத்தமானர் குஷ்பூ. அங்கே உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவது தெரிய வந்ததால், தொகுதியை மாற்றி ஆயிரம் விளக்கில் போட்டியிட்டார்.

மருத்துவர் எழிலனைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் களம் இறங்கிவிட்டார் போலும். பல ஆண்டுகளாக தொகுதி முழுவதும் இலவச மருத்துவம் செய்து, ஒவ்வொரு வீட்டின் செல்லப்பெயரானவர் மருத்துவர் எழிலன். சமூக செயற்பாட்டாளர்களும் எழிலனுக்கு ஆதரவாக களப்பணியாற்றினார்கள். நீட் தேர்வை எதிர்த்து குரல் கொடுத்தவர்களிம் முக்கியமானவர் எழிலன். திமுக ஆட்சியில் சுகாதார அமைச்சராக மருத்துவர் எழிலனுக்கு பொறுப்பு வழங்கப்படும்  என்று தெரிகிறது. 

பாஜக கட்சிக்குத் தாவிய நடிகை குஷ்பூ தன்னை அதிமேதாவியாகக் காட்டிக் கொண்டு பேட்டி அளித்து வந்தார் என்ற கருத்துகள் எழுந்தது. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு இருந்தால் நிச்சயமாக சட்டமன்ற உறுப்பினர் ஆகியிருப்பார் என்றும் கருதப்பட்டது. மேலும், குஷ்பூ செல்லும் கட்சி எல்லாம் தோல்வி அடைந்தே வருகிறது என்ற முத்திரையையும் பெற்று விட்டார்.

From around the web