ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பூ பின்னடைவு!

 
ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பூ பின்னடைவு!

ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பூவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன் முன்னிலையில் இருக்கிறார்.

திமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக மருத்துவர் எழிலனுக்கு பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

ஜெயலலிதாவின் ஆதரவாளராக இருந்த நடிகை குஷ்பூ, திமுகவில் சேர்ந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு சென்ற குஷ்பூவுக்கு தேசிய செய்தித் தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது. சட்டமன்றத்  தேர்தலுக்கு முன்னதாக தடாரென்று பாஜகவுக்கு தாவிய நடிகை குஷ்பூ ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து திமுக அணியில் போட்டியிட்டு இருந்தால் குஷ்பூ நிச்சயம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியிருப்பார் என்கிறார்கள்.

From around the web