மது போதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய நபர்.! கடுப்பாகி விரட்டிய பயணிகள்

 
Thudiyalur

கோவையில் தண்டவாளத்தில் மது போதையில் தூங்கிய நபர் மீது ரயில் கடந்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோவை - மேட்டுப்பாளையம் இடையே தினமும் மெமோ ரயில் சேவை இயங்கி வருகிறது. எட்டு பெட்டிகள் கொண்ட இந்த ரயில் 614 பேர் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் வகையிலும், 1781 பேர் நின்று கொண்டு பயணிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

இந்த ரயில் நேற்று மாலை வழக்கம்போல் மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. துடியலூர் அருகே தண்டவாளத்தின் நடுவே ஒரு நபர் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து, ஓட்டுநர் எச்சரிக்கை ஒலி எழுப்பியுள்ளார்.


அந்த நபர் அசையாத நிலையில், ரயிலை நிறுத்த முயன்றும் மயங்கிக்கிடந்த அந்த நபரைக் கடந்து ரயில் சென்றுவிட்டது. இரயிலுக்குள் இருந்த பயணிகள் பதறியடித்து வந்து பார்த்தபோது, அந்த நபர் கூலாக தூங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது. பின்னர் அவனை அதட்டி, மிரட்டி எழுப்பி, விரட்டிவிட்டனர்.

தண்டவாளத்தில் படுத்து இருந்தவரை ரயில் பெட்டிகள் தாண்டி நின்றும் ஒரு அசம்பாவிதமும் இன்றி உயிர் தப்பிய நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது

From around the web