தெற்கு அந்தமான் பகுதியில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு

 
Cyclone

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை அருகே நேற்று முன்தினம் மாலை கரையை கடந்து வலுவிழந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை உள்பட சில இடங்களில் கன மழை பெய்தது.

இந்நிலையில் வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (நவ. 13) உருவாகக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அங்கிருந்து நகர்ந்து நாளை மறுதினம் (நவ. 14) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 16-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புயுள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தாய்லாந்து கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, 15-ந் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்.

நவம்பர் 15-க்கு பிறகான 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக் கூடும். ஆந்திர கடற்கரையை நோக்கி நகரும்போது தெற்கு ஆந்திரா, வடதமிழக கடலோரப் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

From around the web