5 சவரன் நகைக் கடன் தள்ளுபடி குறித்து அரசாணை எப்போது..? அமைச்சர் ஐ.பெரியசாமி

 
Periyasamy

கூட்டுறவு வங்கிகளில் பெற்ற 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்வது குறித்து, விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தென் மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குதல், உர விநியோகம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, அதிமுக ஆட்சியில் விவசாயிகள் அல்லாதவர்களுக்கு கடன் தள்ளுபடி கொடுத்து உள்ளதாக புகார்கள் வருவதாகவும், அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும் கடந்த ஆட்சியில், கூட்டுறவு பணிகளில் சேர்வதற்கான நேர்காணல் முடிந்தவர்களின் விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்படும் என அமைச்சர் கூறினார்.

From around the web