தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனை..!

 
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனை..!

தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் நேற்று ஒரே நாளில் நேற்று ரூ.292 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் விடுமுறையையொட்டி நேற்று கடைகளில் கூட்டம் அலைமோதியது.  தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.  இதனை முன்னிட்டும், ஞாயிற்று கிழமை ஊரடங்கை முன்னிட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதனால், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கி வைக்க நேற்று திரளானோர் குவிந்து விட்டனர்.  தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் ஒரே நாளில் நேற்று ரூ.292 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.63.44 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.56.72 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.

சேலம் மண்டலத்தில் ரூ.55.93 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ.59.63 கோடிக்கும், கோவையில் ரூ.56 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.

கடந்த 5 நாட்களில் இதுவரை இல்லாத அளவில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web