3 ல் 2 பங்கு வெற்றி! ப.சிதம்பரம் மகிழ்ச்சி!!

 
3 ல் 2 பங்கு வெற்றி! ப.சிதம்பரம் மகிழ்ச்சி!!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 3ல் 2 பங்கு வெற்றி கிடைத்துள்ளதற்கு மகிழ்ச்சியையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்தையும் தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்

“தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் மிகுந்த மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளிக்கின்றன. திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 3-ல் 2 பங்கு இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.

புதிய அரசை அமைக்கவிருக்கும் தி மு கழகத்திற்கும், அதன் தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கும் என் உளங்கனிந்த பாராட்டுதலையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம்.


 

From around the web