கொரோனா பரவல் காரணமாக போதிய பயணிகள் வருகை இல்லாததால் 12 ரயில்கள் ரத்து!

 
கொரோனா பரவல் காரணமாக போதிய பயணிகள் வருகை இல்லாததால் 12 ரயில்கள் ரத்து!

கொரோனா பரவல் காரணமாக போதிய பயணிகள் வருகை இல்லாததால் 12 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக போதிய பயணிகள் வருகை இல்லாததால் 12 ரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், “ராமேஸ்வரம்- கன்னியாகுமரி வாரம் மும்முறை சிறப்பு ரயில்கள் சனி, திங்கள் மற்றும் புதன் ஆகிய நாட்களில் மே 1-ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.

கன்னியாகுமரி- ராமேஸ்வரம் வாரம் மும்முறை சிறப்பு ரயில்கள் ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் மே 2-ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.

பெங்களூர் -கோவை மற்றும் கோவை - கே.எஸ்.ஆர் பெங்களூர் சிறப்பு ரயில் புதன் தவிர அனைத்து நாட்களிலும் ஏப்ரல் 29-தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரல்- மைசூர் சதாப்தி சிறப்பு ரயில் புதன் தவிர அனைத்து நாட்களிலும் இரு மார்க்கத்திலும் ஏப்ரல் 29-தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரல்- கோவை சிறப்பு ரயில் இரு மார்க்கத்திலும் செவ்வாய் தவிர அனைத்து நாட்களிலும் ஏப்ரல் 29 முதல் ரத்து செய்யப்படுகிறது.

எர்ணாகுளம்- பனஸ்வாடி வாரம் இருமுறை சிறப்பு ரயில்கள் திங்கள், புதன் கிழமைகளில் மே 3-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.

பனஸ்வாடி- எர்ணாகுளம் வாரம் இருமுறை சிறப்பு ரயில்கள் செவ்வாய், வியாழக்கிழமைகளில் மே 4-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web