அடேங்கப்பா!! உத்தரப் பிரதேசத்தில் ட்ரெண்ட் ஆன கோபேக் ஸ்டாலின்!

 
up

நேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக கோயமுத்தூர் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக பாஜகவினர் ட்விட்டரில் கோபேக் ஸ்டாலின் என்று ட்ரெண்ட் செய்யத் தொடங்கினர். ஆனால் இந்த ஹேஷ்டேக் உத்தரப் பிரதேசம், மஹாராஷ்ட்ரா மாநிலங்களில் ட்ரெண்ட் ஆகி உள்ளது. 

ட்விட்டரில்  வட இந்தியப் பெயர்களுடனான ட்விட்டர் ஹேண்டில்களிலிருந்து கோபேக் ஸ்டாலின் ஹேஷ்டேக் பரப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்பாடுகளுக்காக பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் கோபேக் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக்கு தமிழ்நாட்டில் ஆதரவு கிடைக்கவில்லை. வட இந்தியாவில் உள்ள பாஜகவினர் மூலம் இந்த ஹேஷ்டேக்கை பிரபலப்படுத்த முயன்றதன் விளைவாக வட மாநிலங்களில் கோபேக் ஸ்டாலின் ட்ரெண்ட் ஆகி இருக்கிறது.

தமிழ்நாட்டை விட்டு வெளியே எங்கேயும் போகாத ஸ்டாலினுக்கு உத்தரப் பிரதேசத்திலும், மஹாராஷ்ட்ராவிலும் கோபேக் ஸ்டாலின் என்று ட்ரெண்ட் செய்து அசிங்கப்பட்டுள்ளனர் பாஜகவினர்.

From around the web