‘யாரையும் மிரட்டிப் பழக்கமில்லை’ – தமிழிசை சௌந்தரராஜன் அந்தர் பல்டி!

குலசேகரப்பட்டினம்: தூத்துக்குடி மாவட்டம் குலேசேகரப்பட்டினத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன், யாரையும் மிரட்டி பழக்கப்பட்டவள் அல்ல என்று கூறியுள்ளார். முன்னதாக தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் கனிமொழியிடம் மிகப்பெரிய வித்தியாசத்தில் தோல்வியுற்ற தமிழிசை, “பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என்று தமிழ்நாடு மக்கள் வருத்தப்படுவார்கள்,” என்று கூறியிருந்தார். குலசேகரப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “தூத்துக்குடி மக்களிட்ம அன்போடு இருக்கிறேன். ஆதங்கத்தில் வருத்தப்படுவார்கள் என்று சொன்னதை மிரட்டுகிறேன் என்று நினைத்துக் கொண்டால் நன பொறுப்பல்ல. நான் யாரையும் மிரட்டிப்
 

‘யாரையும் மிரட்டிப் பழக்கமில்லை’ – தமிழிசை சௌந்தரராஜன் அந்தர் பல்டி!குலசேகரப்பட்டினம்: தூத்துக்குடி மாவட்டம் குலேசேகரப்பட்டினத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன், யாரையும் மிரட்டி பழக்கப்பட்டவள் அல்ல என்று கூறியுள்ளார்.

முன்னதாக தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் கனிமொழியிடம் மிகப்பெரிய வித்தியாசத்தில் தோல்வியுற்ற தமிழிசை,  “பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என்று தமிழ்நாடு மக்கள் வருத்தப்படுவார்கள்,” என்று கூறியிருந்தார்.

குலசேகரப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை,

“தூத்துக்குடி மக்களிட்ம அன்போடு இருக்கிறேன். ஆதங்கத்தில் வருத்தப்படுவார்கள் என்று சொன்னதை மிரட்டுகிறேன் என்று நினைத்துக் கொண்டால் நன பொறுப்பல்ல. நான் யாரையும் மிரட்டிப் பழக்கப்பட்டவள் கிடையாது. மக்களின் ஆதரவை திரட்டிப் பழக்கப்பட்டவள்.

20 நாட்கள் இந்த மக்களுடன் நான் தொடர்பு கொண்டுள்ளேன். இரண்டரை லட்சம் பேர் என்னை ஆதரித்துள்ளார்கள். அவர்களுக்கு என்றும் நன்றியுடன் இருப்பேன். வருங்காலம் எங்களுடையது என்று நன்றாகத் தெரியும். இந்த பகுதி மக்களின் தேவைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவேன்.

புதிய கல்விக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்று எல்லோரிடமும் கேட்டு ஒரு குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது. அவ்வளவு தான். அதற்குள் இந்தித் திணிப்பு என்று தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். இல்லாத இந்தித் திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள்,” என்று பேசியுள்ளார்.

தூத்துக்குடி தொகுதியில் தொடர்ந்து அரசியல் செய்து கனிமொழி எம்.பி.க்கு குடைச்சல் கொடுக்கலாம் எனத் தெரிகிறது.

– வணக்கம் இந்தியா

From around the web