ரிலீசாவதற்கு முன்பே தமிழ் ராக்கர்ஸில் பொன்மகள் வந்தாள் வெளியானது! ரசிகர்கள் அதிர்ச்சி!

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத் தயாரிப்பில் தமிழ் திரையுலக ஜாம்பவான் டைரக்டர்களுடன் ஜோதிகா நடித்து அமேசான் பிரைம் தளத்தில் இன்று வெளியாகி இருக்கும் படம் பொன்மகள் வந்தாள். இந்தப் படத்திற்கான கதையை அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். ஜோதிகா வக்கீல் வேடம் ஏற்று நடித்துள்ள இந்தப் படத்தில் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் நடித்திருப்பதால் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பினை உருவாக்கி இருந்தது. இப்படத்திற்கான இசை 96 பட புகழ் கோவிந்த் வசந்தா. ஒளிப்பதிவு ராம்ஜி. மார்ச்
 

ரிலீசாவதற்கு முன்பே தமிழ் ராக்கர்ஸில் பொன்மகள் வந்தாள் வெளியானது! ரசிகர்கள் அதிர்ச்சி!சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத் தயாரிப்பில் தமிழ் திரையுலக ஜாம்பவான் டைரக்டர்களுடன் ஜோதிகா நடித்து அமேசான் பிரைம் தளத்தில் இன்று வெளியாகி இருக்கும் படம் பொன்மகள் வந்தாள்.

இந்தப் படத்திற்கான கதையை அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். ஜோதிகா வக்கீல் வேடம் ஏற்று நடித்துள்ள இந்தப் படத்தில் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் நடித்திருப்பதால் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பினை உருவாக்கி இருந்தது.

இப்படத்திற்கான இசை 96 பட புகழ் கோவிந்த் வசந்தா. ஒளிப்பதிவு ராம்ஜி. மார்ச் மாதம் திரைக்கு வர வேண்டிய இந்தப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்கு உரிமையாளர்களின் எதிர்ப்பை மீறி நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

இன்று முன்பகல் 12 மணிக்கு வெளியிடப்படுவதாக இருந்த இப்படம் அமேசான் தளத்தில் வருவதற்கு முன்பே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியானது திரையுலகினரை பலத்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தியேட்டரில் படங்கள் வெளியாகும் தினத்திலேயே திருட்டுத் தனமாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் புதுப் படங்களை வெளியிட்டு வந்தது. இந்நிலையில் ஓடிடி யில் ரிலீசாகும் படங்களையும் திருட்டுத்தனமாக வெளியிட்டதால் பெரும் சர்ச்சையையும், கலக்கத்தையும் உருவாக்கி இருக்கிறது.

சினிமாத் துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வந்த போதிலும் தமிழ் ராக்கர்ஸில் படங்கள் வெளியிடப்படுவதை தடுக்க முடியவில்லை.

A1TamilNews.com

From around the web