தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் – சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளுக்கு..

தமிழ் புத்தாண்டு பலன்கள் சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) இராசி அதிபதி சூரியன் 9மிடத்தில் உச்சம் பெறுகிறது. முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆன்மீகப் பிரயாணம் ஏற்படும். தர்ம காரியங்கள் செய்ய நேரிடும். 2, 11க்குரிய புதன் 8மிடத்தில் நீச்சம் பெறுகிறது. எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். நண்பர்கள் பகைவர்கள் ஆவார்கள். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும்.
 

தமிழ் புத்தாண்டு பலன்கள்

தமிழ் புத்தாண்டு  ராசி பலன்கள் – சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளுக்கு..

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
 
இராசி அதிபதி சூரியன் 9மிடத்தில் உச்சம் பெறுகிறது. முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆன்மீகப் பிரயாணம் ஏற்படும். தர்ம காரியங்கள் செய்ய நேரிடும். 
 
2, 11க்குரிய புதன் 8மிடத்தில் நீச்சம் பெறுகிறது. எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். நண்பர்கள் பகைவர்கள் ஆவார்கள். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பிஎஃப் பணம் கிடைக்கும். லாட்டரி, ரேஸ் மூலம் பணம் கிடைக்க வாய்ப்புண்டு. 
 
3, 11க்குரிய சுக்கிரன் 7மிடத்தில் இருப்பதினால் உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும். அரசியலில் புது பதவிகள் கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில் லாபகரமாக நடைபெறும். பிரயாணங்கள் நன்மை தரும். குடும்பத்தில் பாகப் பிரிவினை நடைபெறும். 
 
4, 9க்குரிய செவ்வாய் 10மிடத்தில் இருப்பதினால் வீடு, வாகனம் வாங்க வேண்டிய யோகம் ஏற்படும். பயிர்த் தொழில் லாபகரமாக நடைபெறும். வாகனத் தொழில், ரியல் எஸ்டேட் லாபகரமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். 
 
5, 8க்குரிய குரு 4மிடத்தில் வக்ர கதியில் இருக்கிறது. குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரங்கள் பிரச்சினைகளைக் கொடுக்கும். சினிமா, சங்கீதம் நஷ்டத்தைக் கொடுக்கும். பங்குச் சந்தையில் இருந்து விலகுதல் நல்லது. 6, 7க்குரிய சனி 4மிடத்தில் இருப்பதினால் திருமணத்தில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். தாயரின் உடல்நலம் பாதிக்கும்.
 
பரிகாரம் : சிவனை வழிபட்டு வர சிறப்பு மிகு வாழ்வு அமையும். 
 
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அசுவதம், சித்திரை 1ம் பாதம்)
 
இராசி அதிபதியும் கர்ம ஸ்தானதிபதியுமான புதன் ஏழாமிடத்தில் நீச்சம் பெறுகிறது. தீய செயல்களில் மனம் செல்லாமல் தடுப்பது நல்லது. முயற்சிகளில் மிகுந்த போராட்டத்திற்குப் பின் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பிரச்சினைகள் உண்டாகும். தொழில் பாதிக்கப்படும். பதவி பறி போகும். மதிப்பு, செல்வாக்கு பாதிக்கப்பட வாய்ப்புண்டு. 
 
2,9க்குரிய சுக்கிரன் 6மிடத்தில் இருப்பதினால் அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். உயர் கல்விக்கான உதவித் தொகை கிடைக்கும். அயல் நாடுகளிலிருந்து பணவரவு ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும்.
 
3, 8க்குரிய செவ்வாய் 9மிடத்தில் இருப்பதினால், அயல்நாட்டு விவகாரங்கள் சிரமத்திற்கு மேல் சாதகமாகும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். பிரயாணங்கள் நன்மையைத் தராது. இடமாற்றம் தவிர்க்க வேண்டும். 
 
4, 7க்குரிய குரு  4மிடத்தில் வக்ர கதியில் உள்ளது. வீடு, வாகனம் செலவினங்களைக் கொடுக்கும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். பயிர்த் தொழில் நஷ்டத்தைக் கொடுக்கும். திருமண முயற்சிகள் வெற்றியைத் தராது. கணவன் மனைவி ஒற்றுமை பாதிக்கப்படும். வியாபாரத்தில் போட்டிகள் காணப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் உண்டாகும். 
 
5,6க்குரிய சனி 4மிடத்தில் இருக்கிறது. சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். காதல் விவகாரத்தில் நிம்மதியைக் கெடும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். 
 
பரிகாரம் : புதன்கிழமைகளில் பெருமாளை வழிபடவும். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மை பயக்கும். 
 
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
 
இராசி அதிபதியும் அஷ்டமாதிபதியும் ஆகிய சுக்கிரன் 5 மிடத்தில் இருக்கிறது. மனம் கேளிக்கை விஷயங்களில் செல்லும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபத்தைத் தரும். 
 
2, 7க்குரிய செவ்வாய் 8மிடத்தில் இருக்கிறது. திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி ஒற்றுமை பாதிக்கப்படும். உழைக்காத பணம் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபப் பங்குத் தொகை கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். 
 
3, 6க்குரிய குரு 3மிடத்தில் வக்ர கதியில் உள்ளது. நேர்முகத் தேர்வு வெற்றியைத் தராது. இடமாற்றம் தாமதமாகும். உத்தியோகத்தில் குழப்பம் ஏற்படும். வேலை கிடைப்பதில் சிரமம் உண்டாகும். வழக்குகள் வெற்றியைத் தராது. கடன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். 
 
4, 5க்குரிய சனி 3மிடத்தில் இருப்பதினால், பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்க முடியும். காதல் விவகாரத்தில் இன்பமும் துன்பமும் கலந்து வரும். கல்வியில் மந்த நிலை காணப்படும். 9, 12க்குரிய புதன் 6மிடத்தில் நீச்சம் பெறுவதினால், அயல்நாடுகளில் சிரமத்திற்கு மேல் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். 
 
முதலீடுகள் லாபத்தைத் தராது. மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகும். தகவல் தொடர்புத் துறையினர் கவனத்துடன் செயல்படுவது நல்லது. 11மிடத்து அதிபதி சூரியன் 7மிடத்தில் உச்சம் பெறுகிறார். நண்பர்களிடமிருந்து தேவையான் உதவிகள் கிடைக்கும். ஒரு சில ஆசைகள் நிறைவேறும். 
 
பரிகாரம் : பராசக்தியின் பாதம் பணிந்து வர நன்மை உண்டாகும்.
தமிழ் புத்தாண்டு  ராசி பலன்கள் – சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளுக்கு..
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)
 
இராசி அதிபதி செவ்வாய் 7மிடத்தில் இருக்கிறது. செவ்வாய் இராசியைப் பார்ப்பதினால் உஷ்ண சம்மந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. தலையில் அடிகள் பட வாய்ப்பு இருப்பதினால், வாகனம் ஓட்டும் போது தலைக் கவசம் அவசியம். திருமணம் தடைகளுக்குப் பின் நடைபெறும். கணவன் மனைவி உறவில் சிறிது விரிசல் உண்டாகும். 
 
2, 5க்குரிய குரு வக்ர கதியில் 2மிடத்தில் இருப்பதினால்,  குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். பணவரவு தாமதமாகும். குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். காதல் விவகாரங்கள் பிரச்சினைகளைத் தரும். சினிமா, சங்கீதம் நஷ்டத்தைத் தரும். வங்கியில் நிதி நிலை குறையும்.
 
பங்குச்சந்தை லாபகரமாக இருக்காது. போட்டிகளில் தோல்வி உண்டாகும். 3, 4க்குரிய சனி 2மிடத்தில் இருப்பதினால் இடமாற்றம் நன்மையைத் தரும். வீடு வாகனம் விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எடிட்டிங், எழுத்துத் துறை லாபத்தைத் தரும். 7, 12க்குரிய சுக்கிரன் 4மிடத்தில் இருப்பதினால் வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். 
 
முதலீடுகள் ஓரளவுக்கு வருமானம் தரும். 8, 11க்குரிய புதன் 5மிடத்தில் நீச்சம் பெறுவதினால், நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. மூத்த சகோதரர்கள் உடல்நிலை பாதிக்கப் படும். உழைக்காத பணம் கிடைக்க வாய்ப்புண்டு. சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். பிரயாணங்கள் நன்மையைத் தரும். 
 
பரிகாரம் : திருச்செந்தூர் முருகனைத் தரிசித்து வர நல்ல திருப்பம் உண்டாகும்.
 
தனுசு, மகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கான பலன்கள் நாளை தொடரும்.  
 
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com
தமிழ் புத்தாண்டு  ராசி பலன்கள் – சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளுக்கு..
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளுக்கு…
 

 

From around the web