தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் – மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளுக்கு…

தமிழ் புத்தாண்டு பலன்கள் விகாரி வருடம் 14 – 04 – 2019 அன்று முற்பகல் 11:51:35 க்கு பிறக்கிறது. ஞாயிற்று கிழமை ஆயில்யம் நட்சத்திரம் அன்று மிதுன லக்னத்தில் புத்தாண்டு பிறக்கிறது. புத்தாண்டு பொதுப் பலன் லக்னாதிபதி புதன் பத்தாமிடத்தில் நீச்சம் பெற்றிருக்கிறது. தொழில் ரீதியாக ஒரு சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். பெரிய ஆலைகளின் உற்பத்தி திறன் குறையும். இரண்டாமிடத்து சந்திரன் ஆட்சி பெற்றிருப்பதினால் நாட்டின் நிதிநிலை நன்றாகவே இருக்கும். மூன்றாமிடத்து சூரியன் 11மிடத்தில்
 

தமிழ் புத்தாண்டு பலன்கள்

தமிழ் புத்தாண்டு  ராசி பலன்கள் – மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளுக்கு…

விகாரி வருடம் 14 – 04 – 2019 அன்று முற்பகல் 11:51:35 க்கு பிறக்கிறது. ஞாயிற்று கிழமை ஆயில்யம் நட்சத்திரம் அன்று மிதுன லக்னத்தில் புத்தாண்டு பிறக்கிறது.

புத்தாண்டு பொதுப் பலன்

லக்னாதிபதி புதன் பத்தாமிடத்தில் நீச்சம் பெற்றிருக்கிறது. தொழில் ரீதியாக ஒரு சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். பெரிய ஆலைகளின் உற்பத்தி திறன் குறையும். இரண்டாமிடத்து சந்திரன் ஆட்சி பெற்றிருப்பதினால் நாட்டின் நிதிநிலை நன்றாகவே இருக்கும். மூன்றாமிடத்து சூரியன் 11மிடத்தில் உச்சம் பெறுவதினால் போக்குவரத்துத் துறை, தகவல் தொடர்புத் துறை லாபகரமாக நடைபெறும். அண்டை நாட்டுடன் நல்லுறவு ஏற்படும்.

4மிடத்து அதிபதி நீச்சம் பெறுவதினால் ரியல் எஸ்டேட் பாதிப்புக்குள்ளாகும். வாகன விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. 5, 12 க்குரிய சுக்கிரன் 9மிடத்தில் இருப்பதினால் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் வாய்ப்புண்டு. குழந்தை பிறப்பு விகிதம் அதிகமாகும். 6, 11க்குரிய செவ்வாய் 12மிடத்தில் இருப்பதால் தொழிலாளர்கள் போராட்டங்களைச் சந்திக்க நேரிடும். புதுவகையான நோய்கள் பரவும் வாய்ப்புண்டு.

7, 10 க்குரிய குரு வக்ர கதியில் இருப்பதினால் தொழில் வளம் பாதிக்கப்படும். நிலையில்லா அரசு அமைய வாய்ப்புண்டு. 8, 9 க்குரிய சனி 7 மிடத்தில் இருப்பதினால் அயல்நாட்டு விவகாரங்கள் நன்மையான நிலையில் காணப்படும்.

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

இராசி அதிபதி செவ்வாய் இரண்டாமிடத்தில் இருப்பதினால் பணவசதி தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். 2மிடத்து சுக்கிரன் 11மிடத்தில் இருப்பதினால் திருமணம் போன்ற சுபகாரியங்கள் குடும்பத்தில் நடைபெறும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபத்தைத் தரும். 3, 6 க்குரிய புதன் 12மிடத்தில் நீச்சம் பெறுவதினால், உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.

வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். வேலை தேடுவோர்க்கு மனதிற்குப் பிடிக்காத வேலை கிடைக்கும். 5மிடத்து அதிபதி சூரியன் உச்சம் பெறுவதினால், போட்டிகளில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். குழந்தைகளினால் மதிப்பு, செல்வாக்கு உண்டாகும். கேளிக்கைகளில் ஈடுபாடு உண்டாகும். 9,12 க்குரிய குரு வக்ர கதியில் இருப்பதினால் அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது.

அயல்நாட்டுப் பிரயாணம் தள்ளிப் போகும். உயர்கல்வியில் தேக்கநிலை காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் வெகுவாக பாதிக்கப்படும். 10, 11க்குரிய சனி 9மிடத்தில் இருப்பதினால், பணவரவு பல வகைகளில் வரும். உத்தியோகத்தில் அடிக்கடி விடுமுறை எடுக்க நேரிடும்.

பரிகாரம் : செவ்வாய்கிழமை தோறும் செந்தில் முருகனை வழிபட்டு வர செல்வம் வளரும்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

இராசி அதிபதி சுக்கிரன் 10மிடமாகிய கர்ம ஸ்தானத்தில் இருப்பதினால், மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

2, 5க்குரிய புதன் லாப ஸ்தானத்தில் நீச்சம் பெறுவதினால் தகாத வழிகளில் பணம் சேரும் வாய்ப்பு உண்டு. குழந்தைகளினால் பணவரவு உண்டு. சினிமா, சங்கீதம் லாபகரமாக நடைபெறும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். லாட்டரி, ரேஸ் லாபத்தைத் தரும். பங்குச்சந்தை லாபகரமாக இருக்கும்.

ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 4மிடத்து அதிபதி 12மிடத்தில் உச்சம் பெறுவதினால் தாயாரின் உடல்நலம் பாதிக்கும். வாகனம், நிலம், வீடு ஆகியவற்றில் முதலீடு செய்ய நேரிடும். கல்வியில் சிறிது பின்னடைவு உண்டாகும். பயிர்த்தொழில் பண விரையத்தை உண்டாகும்.

7, 12க்குரிய செவ்வாய் இராசியில் இருப்பதினால் திருமண முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். கணவன், மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் போட்டிகள் காணப்படும். மனைவிக்கு உடல் நலம் பாதிக்கும். 8, 11க்குரிய குரு 8மிடத்தில் வக்ர கதியில் இருப்பதினால், நண்பர்களிடையே மனஸ்தாபம் உண்டாகும்.

உழைக்காத பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இன்சுரன்ஸ், பி.எஃப் போன்றவைகள் தாமதமாகும். 9, 10க்குரிய சனி எட்டாம் இடத்தில் இருப்பதினால், அயல்நாட்டு விவகாரங்களில் தடைகள் காணப்படும். தந்தையின் உடல்நலம் பாதிக்கும். வாகனம் ஓட்டும் கவனம்.

பரிகாரம் : பராசக்தியை வழிபட்டு வர பிரச்சினைகள் விலகி ஓடும்.

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

இராசி அதிபதி புதன் 10 மிடத்தில் நீச்சம் பெறுவதினால் எதிர்பாராமல் பெரிய பதவிகள் கிடைக்க வாய்ப்புண்டு. மதிப்பு, செல்வாக்கை பொறுத்த மட்டில் ஏற்றம் இறக்கம் காணப்படும். விலை குறைந்த வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 3மிடத்து அதிபதி சூரியன் 11மிடத்தில் உச்சம் பெறுவதினால் இடமாற்றம் உண்டாகும்.

எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். லாட்டரி லாபத்தைக் கொடுக்கும். பிரயாணங்கள் நன்மையைத் தரும். குடும்பத்தில் பாகப் பிரிவினை நடைபெறும். எடிட்டிங் விளம்பரம் போன்ற செயல்கள் லாபகரமாக இருக்கும்.

5, 12 க்குரிய சுக்கிரன் 9மிடத்தில் இருப்பதினால் காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். குழந்தைகளுக்கு அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். 6,11க்குரிய செவ்வாய் 12 மிடத்தில் இருப்பதினால் உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். முதலீடுகளிலிருந்து பணவரவு உண்டாகும்.

வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். கடன் கிடைக்கும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. 7, 10க்குரிய குரு 7மிடத்தில் வக்ர கதியில் இருப்பதினால் திருமணத்தில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி ஒற்றுமை பாதிக்கப்படும். தொழில் முடக்கம் ஏற்படும். 8, 9க்குரிய சனி 7மிடத்தில் இருப்பதினால் வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. அடிக்கடி உடல்நலக் குறைவு உண்டாகும் வாய்ப்பு உண்டு.

பரிகாரம்: பெருமாளை வழிபட்டு வர பெருமைகள் வந்து சேரும்

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

புத்தாண்டு பிறக்கும் போது இராசி அதிபதி சந்திரன் இராசியிலேயே இருப்பதினால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். 2மிடத்து அதிபதி சூரியன் 10மிடத்தில் உச்சம் பெறுவதினால் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்க வாய்ப்பு ஏற்படும். பதவிகள் கிடைக்கும். 3,12க்குரிய புதன் 9மிடத்தில் இருப்பதினால், அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். எடிட்டிங், தரகர் தொழில் நஷ்டத்தில் இயங்கும். குடும்பத்தில் பாகப்பிரிவினை உண்டாகும். பிரயாணங்களினால் நஷ்டம் உண்டாகும்.

4,11க்குரிய சுக்கிரன் 8மிடத்தில் இருப்பதினால் வீடு, வாகனம் மனைவி பெயரில் வாங்கும் யோகம் உண்டாகும். வீடு, வாகனங்கள் செலவினங்களைத் தரும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. உழைக்காத பணம் கிடைக்க வாய்ப்புண்டு. தாயாரின் உடல்நலம் பாதிக்கும். கல்வியில் பின்னடைவு உண்டாகும்.

5, 10க்குரிய செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருப்பதினால் உயர் பதவிக்கு வாய்ப்புண்டு. உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக நடைபெறும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். சினிமா, சங்கீதத்தில் பெயர், புகழ் கிடைக்கும்.

6, 9க்குரிய குரு 6மிடத்தில் வக்ர கதியில் இருப்பதினால், அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். சில கடன்கள் கவலையைத் தரும். 7, 8க்குரிய சனி 6மிடத்தில் இருப்பதினால் திருமணத்தில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி ஒற்றுமை பாதிக்கப்படும்.

பரிகாரம்: லலிதா சகஸ்ர நாமம் சௌந்தர்ய லஹரி பாராயணம் செய்து வர நன்மைகள் தேடி வரும்.

சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசிக்காரர்களுக்கான பலன்கள் நாளை தொடரும்.

ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com

From around the web