இனி ஆவின் நெய்க்கு ‘நோ’ அக்மார்க்!

ஆவின் நெய் உள்ளிட்ட 66 உணவுப் பொருட்கள் அக்மார்க் தர முத்திரயை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண்துறையின் கீழ் செயல்படும் சந்தைபடுத்துதல் மற்றும் கண்காணிப்பு இயக்ககம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அரிசி, பருப்பு, எண்ணெய், தேன் உள்ளிட்ட 225 விவசாயப் பொருட்களுக்கு அக்மார்க் முத்திரை வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் ஆவின் நெய், ஹட்சன் உள்ளிட்ட 33 நிறுவனங்களின் உணவுப் பொருட்கள் அக்மார்க் முத்திரையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அக்மார்க் தரச் சான்றிதழ் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கவேண்டும்
 

இனி ஆவின் நெய்க்கு ‘நோ’ அக்மார்க்!

ஆவின் நெய் உள்ளிட்ட 66 உணவுப் பொருட்கள் அக்மார்க் தர முத்திர‌யை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண்துறையின் கீழ் செயல்படும் சந்தைபடுத்துதல் மற்றும் கண்காணிப்பு இயக்ககம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் அரிசி, பருப்பு, எண்ணெய், தேன் உள்ளிட்ட 225 விவசாயப் பொருட்களுக்கு அக்மார்க் முத்திரை வழங்கப்பட்டுள்ளது. அ‌வற்றில்‌ ஆவின் நெய், ஹட்சன் உள்ளிட்ட 33 நிறுவனங்களின் உணவுப் பொருட்கள் அக்மார்க் முத்திரையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அக்மார்க் தரச் சான்றிதழ் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கவேண்டும் என்ற நிலையில் சான்றிதழ் புதுப்பிக்கப்படாததால்‌ அக்மார்க் முத்திரையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மீறி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.‌

இவை தவிர 37 அரிசி வகைகள் உள்ளிட்ட 66 பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆவின் நெய்க்கான அக்மார்க் தரச் சான்றிதழ்‌ இன்னும் காலாவதியாகவில்லை எனவும், புதுப்பிக்க 2023ஆம் ஆண்டு வரை கால அவ‌காசம் இருப்பதாகவும் ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

https://www.A1TamilNews.com

From around the web