7ம் இடத்திலிருந்த தமிழகத்தை 4ம் இடத்திற்கு உயர்த்திய கோயம்பேடு மார்க்கெட்?

தமிழ்நாட்டில் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்கள் கொரோனா இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் 7ம் இடத்தில் இருந்த தமிழ்நாடு 4ம் இடத்திற்கு உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ள மாநிலங்கள் வரிசையில் 4ம் இடத்தை அடைந்து விட்டது. கடந்த சில நாட்களாக, கோயம்பேடு மார்க்கெட் சென்று வந்தவர்களுக்கு கொரோனா தொற்று பரவியதால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,458 ஆக உயர்ந்துள்ளது. 17 பேர் உயிரிழந்துள்ளனர். 226 பேர் குணமடைந்துள்ளனர்,
 

7ம் இடத்திலிருந்த தமிழகத்தை 4ம் இடத்திற்கு உயர்த்திய கோயம்பேடு மார்க்கெட்?மிழ்நாட்டில் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்கள் கொரோனா இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் 7ம் இடத்தில் இருந்த தமிழ்நாடு 4ம் இடத்திற்கு உயர்ந்துள்ளது.

இந்தியாவிலேயே கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ள மாநிலங்கள் வரிசையில் 4ம் இடத்தை அடைந்து விட்டது. கடந்த சில நாட்களாக, கோயம்பேடு மார்க்கெட் சென்று வந்தவர்களுக்கு கொரோனா தொற்று பரவியதால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,458 ஆக உயர்ந்துள்ளது. 17 பேர் உயிரிழந்துள்ளனர். 226 பேர் குணமடைந்துள்ளனர், 1,210 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஒரே நாளில் அதிகபட்சமாக 308 பேருக்கு சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் கோயம்பேடு மார்க்கெட் சென்று வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. கோயம்பேட்டிலிருந்து அரியலூர், கடலூர் மாவட்டங்களுக்குச் சென்றவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 3 ஆயிரத்து 23 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் மிகவும் அதிகம் பாதிக்கப்பட்ட மஹாராஷ்ட்ராவில் 12 ஆயிரத்து 924 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக குஜராத்தில் 5 ஆயிரத்து 428, டெல்லி 4 ஆயிரத்து 549, தமிழ்நாடு 3 ஆயிரத்து 23, ராஜஸ்தான் 2 ஆயிரத்து 886, மத்திய பிரதேசம் 2 ஆயிரத்து 837, உத்தர பிரதேசம் 2 ஆயிரத்து 645 என்ற வரிசையில் உள்ளன.

இந்தியாவில் மொத்த பாதிப்பு 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 1,300 பேருக்கு மேலானோர் உயிரிழந்துள்ளனர்.

A1TamilNews.com

 

From around the web