தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கப்போகும் மாவட்டங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் !

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் கோடை வெப்பம் குறைந்து ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. பருவநிலை மாற்றம், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை முதலே சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இன்று அதிகாலையில் சென்னையில் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி
 

தமிழகத்தில்  கனமழை வெளுத்து வாங்கப்போகும் மாவட்டங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் !மிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் கோடை வெப்பம் குறைந்து ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது.

பருவநிலை மாற்றம், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை முதலே சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இன்று அதிகாலையில் சென்னையில் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையைப் பொறுத்தவரை லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். பல இடங்களில் பரவலான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தவிர தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. மழை மேலும் தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web