அமெரிக்காவில் தமிழ்க் கல்வி… தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் கூட்டு முயற்சி!

வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்காக ஒருங்கிணைந்த தமிழ்க் கல்வியை முன்னெடுத்துச் செல்லும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமெரிக்காவில் வசிக்கும் குழந்தைகளுக்காகப் புதிய கூட்டு முயற்சியைத் தொடங்கியுள்ளனர். அமெரிக்காவில் இயங்கி வரும் எட்யுரைட் அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்ப் பல்கலைக்கழத்தின் துணை வேந்தர் முனைவர். பாலசுப்பிரமணியன் முன்னிலையில் கையெழுத்தானது. பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ.) முனைவர் கு. சின்னப்பன், எட்யுரைட் அறக்கட்டளையின் ஆலோசகர். இராமு இளங்கோ ஆகியோர் கையெழுத்திட்டனர். “தமிழக அரசின் சார்பில் அயலகத்தில் ஒருங்கிணைந்த தமிழ்க் கல்வியை முன்னெடுத்துச் செல்லும் எங்கள்
 

அமெரிக்காவில் தமிழ்க் கல்வி… தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் கூட்டு முயற்சி!வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்காக ஒருங்கிணைந்த தமிழ்க் கல்வியை முன்னெடுத்துச் செல்லும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமெரிக்காவில் வசிக்கும் குழந்தைகளுக்காகப் புதிய கூட்டு முயற்சியைத் தொடங்கியுள்ளனர்.

அமெரிக்காவில் இயங்கி வரும் எட்யுரைட் அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்ப் பல்கலைக்கழத்தின் துணை வேந்தர் முனைவர். பாலசுப்பிரமணியன் முன்னிலையில் கையெழுத்தானது. பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ.) முனைவர் கு. சின்னப்பன், எட்யுரைட் அறக்கட்டளையின் ஆலோசகர். இராமு இளங்கோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.

“தமிழக அரசின் சார்பில் அயலகத்தில் ஒருங்கிணைந்த தமிழ்க் கல்வியை முன்னெடுத்துச் செல்லும் எங்கள் துறை, பல்வேறு நாடுகளில் உள்ள கல்வி அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். எட்யுரைட் அறக்கட்டளையுடன் இணைந்து அமெரிக்காவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டங்களை இணையம் மற்றும் நேரடி வகுப்புகள் வழியாகச் செயல்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளோம்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வழக்கமான பாடத்திட்டத்துடன் சேர்த்து, அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகளுக்காக 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பள்ளிக் கல்வியும், அமெரிக்கத் தமிழ்ப் பள்ளியில் பணியாற்றிவரும் தன்னார்வ ஆசிரியர்களுக்கான பட்டயப் பயிற்சி வகுப்புகளும் நடத்த உள்ளோம்,” என்று அயலகக் கல்வி மற்றும் தமிழ் வளர் மையத்தின் இயக்குனர் முனைவர். இரா. குறிஞ்சி வேந்தன் தெரிவித்தார்.

அமெரிக்காவில் தமிழ்க் கல்வி… தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் கூட்டு முயற்சி!
இந்த கூட்டுத் திட்டத்திற்கு எட்யுரைட் அறக்கட்டளையின் சார்பில் முனைவர். சித்ரா மகேஷ் தலைமை வகிக்கிறார். ஆலோசகர்களாக கால்டுவெல் வேள்நம்பி மற்றும் இராமு இளங்கோ செயல்படுகிறார்கள்.

“வட அமெரிக்காவில் இன்று ஹார்வர்ட், பெர்க்கிலி, ஸ்டோனி புரூக் பல்கலைக் கழங்கங்களில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. ஹூஸ்டன், தெற்கு கரோலினா, ரொண்டோ பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆய்வு இருக்கைகள் தொடர்ந்து வெற்றிகரமாகச் செயல்படவும், அடுத்த தலைமுறையினர் தமிழை எழுதி, படித்து, பேசுவது மட்டுமின்றி அறம் சார்ந்த கல்வி, தமிழ் மொழியில் அமெரிக்காவிலிருந்து புதிய படைப்புகள் மற்றும் தொழில் முனைப்பினை ஏற்படுத்துவது எங்கள் அறக்கட்டளையின் முதன்மை நோக்கங்களாகும். இந்த முயற்சியில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது,” என்று எட்யுரைட் அறக்கட்டளையின் தலைவர் கீர்த்தி ஜெயராஜ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 94 மாணவர்களுக்குப் பள்ளி, பட்டப் படிப்பிற்கான கல்வி உதவித்தொகை, தாய்த் தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டுப் பணிகள், தமிழ் ஆசிரியர்களுக்கான பயிலரங்கங்கள் மற்றும் அமெரிக்காவில் டெக்சாஸ் பல்கலைக்கழகம் (UT) மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் போன்ற கல்விப் பணிகள் எட்யுரைட் அறக்கட்டளை சார்பில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, அமெரிக்காவில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் தமிழ்ப் பள்ளிகளும், மாணவர்களும் இருந்த நிலை மாறி, நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள், ஆயிரக்கணக்கான மாணவர்கள் என்று விரிவடைந்துள்ளது. பல அமெரிக்க கல்வி மாவட்டங்களில் உயர்நிலைப் பள்ளி மதிப்பெண்களுக்கான அங்கீகாரமும் தமிழ் மொழிக்கு கிடைத்துள்ளது.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைகழகத்தின் பாடத்திட்டங்களும், பயிற்சி வகுப்புகளும் சேரும் நிலையில் அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகளின் தமிழ்த் திறன் நிச்சயம் மேலும் தழைத்தோங்கும். எதிர்காலத்தில் அமெரிக்காவில் தமிழ் மொழிக்கான சிறப்பிடம் உருவாகும் என்றும் நம்பலாம்.

http://www.A1TamilNews.com

From around the web