காஷ்மீர் கிலானி! ஓய்ந்து போன பிரச்னையை உசுப்பத் தேவையில்லை!!

பல ஆண்டுகளாக காஷ்மீர் பிரிவினைவாத குழுக்களின் முகமாக பிரகாசித்த 90 வயது சையது அலி கிலானி ஜூன் 29 அன்று தலைமைப் பொறுப்பில் இருந்து விலகினார். இந்த ராஜினாமா அவரைச் சுற்றியுள்ள தீவிரவாத தலைவர்களுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரு செய்தியை தெரிவிக்கிறது. மத்திய அரசு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தபோது கிலானி கடும் எதிர்ப்பை காட்டவில்லை என அவரைச் சுற்றி இருந்தவர்கள் குறைபட்டனர். சமரசத்துக்கு மசியாத அரசியல் தியாகியாக கடைசி காலம் வரை வாழ கிலானி விரும்புகிறார்
 

காஷ்மீர் கிலானி! ஓய்ந்து போன பிரச்னையை உசுப்பத் தேவையில்லை!!பல ஆண்டுகளாக காஷ்மீர் பிரிவினைவாத குழுக்களின் முகமாக பிரகாசித்த  90 வயது சையது அலி கிலானி ஜூன் 29  அன்று தலைமைப் பொறுப்பில் இருந்து விலகினார். இந்த ராஜினாமா அவரைச் சுற்றியுள்ள தீவிரவாத தலைவர்களுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரு செய்தியை தெரிவிக்கிறது. 

மத்திய அரசு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தபோது  கிலானி கடும் எதிர்ப்பை காட்டவில்லை என அவரைச் சுற்றி இருந்தவர்கள் குறைபட்டனர்.  சமரசத்துக்கு  மசியாத அரசியல் தியாகியாக கடைசி காலம் வரை வாழ கிலானி விரும்புகிறார் என்று தெரிகிறது. 1970 களில் காஷ்மீர் சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டார் கிலானி. 1990 களில்  தேர்தல் புறக்கணிப்பு கோஷம் எழுப்பினார். 

கிலானியின்  பேச்சுக்கள் மக்களையும் தொண்டர்களையும் தெருவில் இறங்கி போராட வைத்தன. ஆனால் தற்போது அவரது வயது, உடல்நிலை, இன்றைய அரசியல் சூழல், அவருக்கு சாதகமாக இல்லை. மத்திய அரசின் இன்றைய நடவடிக்கைகள் தீவிரவாதிகளின் செயல்பாட்டை முடக்கிவிட்டது. அரசியல் சாசனத்துக்கு எதிராக போராட முடியாது என்ற மனநிலைக்கு பிரிவினைவாதிகள் தள்ளப்பட்டனர். 

பிரிவினைவாதிகளுக்கு தீவிரவாதிகளும் அனுபவித்த அரசியல் களத்தை தேசிய காட்சிகள் கைப்பற்ற காலம் கனிந்துள்ளது.  மேற்கு பாகிஸ்தான் அகதிகள், தலித்துகள், கூர்கிஸ் ஆதரவு  குடியுரிமை திருத்த சட்டம் முலம் மத்திய அரசு க்கு  கிடைத்துவிட்டது.  தேசிய நீரோட்டத்தில் ஜம்மு காஷ்மீர் மக்களை இணைக்கும் பொறுப்பு  தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க.கட்சிகளுக்கு தான் அதிகம்.

பிரிவினைவாதிகளும் தீவிரவாதிகளும் சோர்ந்து ஓயும் நேரத்தில் அம்மாநில டி.ஜி.பி.  தில்பாக் சிங்,  “கிலானியின் ராஜினாமா தீவிரவாதம் தோற்றுவிட்டது என அவரது ஒப்புதலை வெளிப்படுத்துகிறது”  என கருத்து தெரிவித்துள்ளார். 

டிஜிபி தில்பாக் சிங்கின்  கருத்தில்  உண்மையென்றாலும் இப்போது அவர் இதை கூறி இருக்க கூடாது, தோல்வியடைந்தவர்களை மீண்டும் தூண்டிவிடுவது போல ஆகிவிடும்.  பிரிவினைவாதிகள் தேசிய நீரோட்டத்தில் கலந்து மாநிலத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் பாடுபட வேண்டும் என அறைகூவல்  விடுத்திருக்கலாம். 

ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதிகளில்  தொழில் வளர்ச்சி வேலை வாய்ப்பு அமைதி உருவாக்க மத்திய அரசு முன்னுரிமை தர வேண்டும்

– வி.எச்,கே. ஹரிஹரன்

A1TamilNews.com

From around the web