ஸ்விஸ் வங்கிக் கணக்கு முதல் பட்டியல்!

டெல்லி: ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் வைத்துள்ள கணக்குகளின் முதல் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார்கள். கோடிக்கணக்கான கருப்புப் பணம் ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள பணத்தை மீட்போம் என ஓவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வந்தது. பாஜக ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் டெபாசிட் செய்வோம் என்றெல்லாம் கூறப்பட்டது. சுவிட்சர்லாந்து அரசுடன் இந்திய அரசு, பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கருப்பு பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்களின்
 

ஸ்விஸ் வங்கிக் கணக்கு முதல் பட்டியல்!டெல்லி: ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் வைத்துள்ள கணக்குகளின் முதல் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார்கள்.

கோடிக்கணக்கான கருப்புப் பணம் ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள பணத்தை மீட்போம் என ஓவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வந்தது. பாஜக ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் டெபாசிட் செய்வோம் என்றெல்லாம் கூறப்பட்டது.

சுவிட்சர்லாந்து அரசுடன் இந்திய அரசு, பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கருப்பு பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்களின் விவரங்களை வழங்க சுவிஸ் வங்கிகள் ஒப்புதல் அளித்துள்ளன.

வருமான வரியிலிருந்து தப்புவதற்காக சுவிட்சர்லாந்து வங்கியில் இந்தியர்கள் பலர் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை பதுக்கிவைத்துள்ளனர். அது குறித்த விவரங்களின் முதல் பட்டியலை இந்திய அரசிடம் ஸ்விஸ் வங்கியினர் வழங்கியுள்ளனர். இதில் தற்போது செயல்பாட்டில் உள்ள கணக்குகளும் 2018ம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்து மூடப்பட்ட கணக்குகளும் அடங்கும்.

அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இரண்டாவது பட்டியலை வழங்குவதற்கும் ஸ்விஸ் வங்கி உறுதியளித்துள்ளது. கருப்புப் பணம் பதுக்கி வைத்துள்ளவர்களின் முதல் பட்டியல் கிடைத்துள்ளதால், அரசு தரப்பிலிருந்து அடுத்து என்னென்ன நடவடிக்கைகள் பாயும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

– வணக்கம் இந்தியா

From around the web