9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் – உச்சநீதிமன்றம்!

தமிழ்நாட்டில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற பகுதிகளில் ஊரக அமைப்புகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வருகிற 27 மற்றும் 30ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. உள்ளாட்சித் தேர்தலை இரண்டாகப் பிரித்து நடத்துவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, நேற்று விரிவான விசாரணை
 

9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் – உச்சநீதிமன்றம்!மிழ்நாட்டில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற பகுதிகளில் ஊரக அமைப்புகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வருகிற 27 மற்றும் 30ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. உள்ளாட்சித் தேர்தலை இரண்டாகப் பிரித்து நடத்துவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக, நேற்று விரிவான விசாரணை நடைபெற்ற நிலையில், தீர்ப்பு இன்று வெளியாகும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு தெரிவித்திருந்தது. அதன்படி, தீர்ப்பளித்துள்ள நீதிபதிகள், பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் தேர்தலை நடத்தலாம் என உத்தரவிட்டனர். மேலும், 4 மாதங்களுக்குள் தொகுதி மறுவரையறை பணிகளை முடித்து 9 மாவட்டங்களிலும் இட ஒதுக்கீட்டின்படி ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட பிரிப்புக்குள்ளான நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இப்போது நடைபெறாது. மீதமுள்ள பகுதிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் வெளியிடவுள்ள புதிய அறிவிப்பாணையின்படி தேர்தல் நடைபெறும்.

https://www.A1TamilNews.com

From around the web