2.28 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்! தமிழக அரசு தகவல்

வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்தே சொந்த ஊருக்குச் செல்லும் அவலங்களை கண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்து மத்திய மாநில அரசுகள் தகவல் தெரிவிக்க உத்தரவு பிறப்பித்தனர். தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், இதுவரையிலும் 2 லட்சத்து 28 ஆயிரம் வெளிமாநிலத் தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் அவரவர் இருப்பிடங்களில் தங்கியுள்ள 70 ஆயிரம் பேருக்கு தினமும் உணவு வழங்கப்பட்டு
 

2.28 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்! தமிழக அரசு தகவல்வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்தே சொந்த ஊருக்குச் செல்லும் அவலங்களை கண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்து மத்திய மாநில அரசுகள் தகவல் தெரிவிக்க உத்தரவு பிறப்பித்தனர்.

தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், இதுவரையிலும் 2 லட்சத்து 28 ஆயிரம் வெளிமாநிலத் தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் அவரவர் இருப்பிடங்களில் தங்கியுள்ள 70 ஆயிரம் பேருக்கு தினமும் உணவு வழங்கப்பட்டு வருவதாகவும், 3 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு ரேஷன் கடைகள் மூலம் உணவுப் பொருட்களும், தலா ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் அனைவரும் அவர்களுடைய சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான ரயில் கட்டண செலவை மாநிலங்களே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் மாநிலங்களே, அவர்களுக்கான உணவு, நீர் மற்றும் இருப்பிடத்திற்கான தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

A1TamilNews.com

From around the web