மோடி அரசுக்கு இடி.. ரஃபேல் வழக்கு மறு சீராய்வு மனு மீது விசாரணை, ஜெராக்ஸ் காப்பி சாட்சிகள் ஏற்பு – உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

டெல்லி: ரஃபேல் விமானம் வாங்கியது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று, புதன்கிழமை முக்கிய முடிவு எடுக்க உள்ளது. ரஃபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இது ராணுவ விவகாரம் என்பதால், அரசு தரப்பில் சீல் வைத்த கவர் மூலம் முக்கிய தகவல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கொள்முதலில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறு சீராய்வு செய்யக் கோரி வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள்
 

டெல்லி: ரஃபேல் விமானம் வாங்கியது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று, புதன்கிழமை முக்கிய முடிவு எடுக்க உள்ளது. ரஃபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இது ராணுவ விவகாரம் என்பதால், அரசு தரப்பில் சீல் வைத்த கவர் மூலம் முக்கிய தகவல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கொள்முதலில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை மறு சீராய்வு செய்யக் கோரி வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோ மனு செய்திருந்தனர். உடன், இந்து நாளிதழில் வெளியான ரஃபேல் கொள்முதல் தொடர்பான ஆவணங்களையும் சாட்சியாக இணைத்திருந்தார்கள்.

அரசு தரப்பில் வாதாடிய அட்டர்னி ஜெனரல், இந்த ஆவணங்கள் திருடு போய்விட்டதாக முதலில் கூறினார். என்ன நடவடிக்கைகள் எடுத்தீர்கள் என்று நீதிபதிகள் கேட்டனர். பின்னர், திருடு போகவில்லை, ஒரிஜினல் ஆவணங்களிலிருந்து ஜெராக்ஸ் காப்பி எடுத்துள்ளனர் என்று பல்டி அடித்தார். இந்த ஆவணங்களை வழக்கில் சாட்சியாக எடுத்துக் கொள்ளலாம் என்ற முடிவை இன்று உச்சநீதிமன்றம் எடுத்து உள்ளது. மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒருமித்த கருத்தாக இந்த முடிவை எடுத்துள்ளது.

ரஃபேல் மறு சீராய்வு மனு மீது விரிவான விசாரணை நடக்கும். விசாரணைக்கான தேதி பின்னர் அறிவிக்கப் படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தங்கள் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து அருண் ஷோரி, பிரசாந்த் பூஷண், யஷ்வந்த் சின்ஹா மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த ஆவணங்கள் வெளிவரக் காரணமாக் இருந்தது இந்து பத்திரிக்கை என்பது குறிப்பிடத் தக்கது.

முதல் கட்டத் தேர்தல் நாளை தொடங்க உள்ள நிலையில் மோடி அரசுக்கு பெரும் பின்னடைவாக உச்சநிதிமன்றத் தீர்ப்பு கருதப்படுகிறது.

– வணக்கம் இந்தியா

From around the web