மீண்டும் விசாரணையில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு! தேர்தலுக்கு முன்னாடி முடிவுக்கு வந்துடுமா?

அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், செம்மலை உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித்தாவல் சட்டத்தில் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக திமுக கொறடா சக்ரபாணி சபாநாயகரிடம் மனு வழங்கியிருந்தார். இது தொடர்பாக சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. நீண்ட நாட்களாக முடிவு எடுக்காத சபாநாயகருக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகக் கூறி பிப்ரவரி மாதம்
 

மீண்டும் விசாரணையில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு! தேர்தலுக்கு முன்னாடி முடிவுக்கு வந்துடுமா?திமுக அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், செம்மலை உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித்தாவல் சட்டத்தில் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக திமுக கொறடா சக்ரபாணி சபாநாயகரிடம் மனு வழங்கியிருந்தார்.

இது தொடர்பாக சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. நீண்ட நாட்களாக முடிவு எடுக்காத சபாநாயகருக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகக் கூறி பிப்ரவரி மாதம் வழக்கை முடித்து வைத்தது.

உச்சநீதிமன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டு மேலும் 3 மாதங்கள் ஆகியும் இன்னும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, சபாநாயகருக்கும் 11 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

சட்டமன்றத்தின் காலம் மே மாதம் முடிவுக்கு வருவதால், விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தரப்பில் ஆஜரான கபில்சிபல் கோரிக்கை வைத்தார். விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் அதிமுகவின் பலம் 125 ஆக உள்ளது. ஒபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 114 ஆக குறையும். 3 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் திமுக-காங்கிரஸ் அணியின் பலம் 105 ஆக உள்ளது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும் அதிமுக ஆட்சிக்கு பாதிப்பு வராது.

ஆனாலும் 11 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் சட்டப்பூர்வமான தீர்ப்புக்காக திமுக தரப்பில் தொடர்ந்து போராடுவதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் துணை முதலமைச்சர் பதவியிலிருந்து விலகவேண்டியிருக்கும். அது அதிமுக கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது.

A1TamilNews.com

From around the web