எட்டுவழிச் சாலை .. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

டெல்லி: சேலம் – சென்னை எட்டுவழிச் சாலை திட்டத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதி மன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான சேலம் சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு ஆய்வு நடத்தப்படவில்லை, சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படவில்லை என பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி உயர்நீதிமன்றம், அந்த திட்டத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்து இருந்தது. சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்திலேயே, எட்டுவழிச் சாலை திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று
 
எட்டுவழிச் சாலை .. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
டெல்லி: சேலம் – சென்னை எட்டுவழிச் சாலை திட்டத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதி மன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான சேலம் சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு ஆய்வு நடத்தப்படவில்லை, சுற்றுச்சூழல்  அனுமதி பெறப்படவில்லை என பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி உயர்நீதிமன்றம், அந்த திட்டத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்து இருந்தது.

சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்திலேயே, எட்டுவழிச் சாலை திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசியிருந்தார். அந்ததிட்டத்திற்கு ரத்து செய்ய  வழக்கு தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் உத்தரவை வாங்கிய மனுதாரர்களில் ஒருவரான பாமகவின் நிறுவனர் டாக்டர்.ராமதாஸும் அதைக் கேட்டுக் கொண்டு தான் இருந்தார்.

மத்திய அமைச்சர் சொன்னது போலவே, புதிய ஆட்சி அமைந்ததும் உச்சநீதிமன்றத்தில் விடுமுறை கால மனுவாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.  தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

விடுமுறை கால அமர்வின் நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா மற்றும் எம்.ஆர். ஷா, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது. சம்மந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புகிறோம் என்று கூறியுள்ளார்கள். அதன்படி தமிழ்நாடு அரசு உள்ளிட்ட சேலம் – சென்னை எட்டுவழி சாலை திட்டம் சம்மந்தப்பட்டவர்களுக்கு பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில், பாதுகாப்பப்பட்ட வனப்பகுதி வழியாக இந்த சாலை செல்கிறது. அது குறித்து சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படவில்லை. மேலும் இந்த சாலையினால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வனக் கொள்ளையர்கள் எளிதாகச் செல்ல வழி ஏற்படும். அரிய வகை மரங்கள் சாய்க்கப்படும். அரிய தாவர வகைகள் அழிந்து விடும் , நீர் ஆதாரங்கள் அழியும் என பல்வேறு காரணங்களையும் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருந்தார்கள்.

உச்சநீதிமன்ற வழக்கில் இந்த விவரங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது. எட்டுவழி சாலை திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்து இருந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உச்சநீதிமன்ற வழக்கையும் எதிர்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளனர்.

– வணக்கம் இந்தியா

 

From around the web