ரஃபேல் வழக்கில் ஏன் எஃப்ஐஆர் போடவில்லை.. உச்சநீதிமன்றம் கிடுக்கிப் பிடி!

டெல்லி: கடந்த அக்டோபர் மாதம் சிபிஐ அலுவலகத்தில் ரஃபேல் ஊழல் தொடர்பாக வழங்கப்பட்ட புகார் மீது ஏன் எஃப்ஐஆர் போடவில்லை என்று உச்சநீதிமன்ற கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் சிபிஐ அலுவலகத்தில் ரஃபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக, நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்துள்ளனர். இந்த புகார் மனு மீது முதல் தகவல் அறிக்கை ஏன் பதிவு செய்யப்படவில்லை
 
டெல்லி: கடந்த அக்டோபர் மாதம் சிபிஐ அலுவலகத்தில் ரஃபேல் ஊழல் தொடர்பாக வழங்கப்பட்ட புகார் மீது ஏன் எஃப்ஐஆர் போடவில்லை என்று உச்சநீதிமன்ற கேள்வி எழுப்பியுள்ளது.
 
முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் சிபிஐ அலுவலகத்தில் ரஃபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக, நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்துள்ளனர்.
 
இந்த புகார் மனு மீது முதல் தகவல் அறிக்கை ஏன் பதிவு செய்யப்படவில்லை என்று சிபிஐக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை மேற்கோள் காட்டி இந்த புகார் மனுவை தாக்கல் செய்து இருந்தார்கள்.
 
லலிதா குமாரி வழக்கு தீர்ப்பை சுட்டிக்காட்டிய நீதிபதி ஜோசப், புகார் அளிக்கப்பட்டால் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து உரிய நடவடிக்கை எடுப்பது தான் கடமை. ஏன் அவ்வாறு செய்ய வில்லை என்று அரசு அட்டர்னி ஜெனரலிடம் கேள்வி எழுப்பினார்.
 
ரஃபேல் விமான வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சரமாரியான கேள்விகள் கேட்கப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.
 
– வணக்கம் இந்தியா

From around the web