சூப்பர் டீலக்ஸ் – இது படமா… இனி இப்படித்தான் எடுப்பீர்களா?

சூப்பர் டீலக்ஸ் படத்தை இந்த கோணத்தில்தான் பார்க்க வேண்டியுள்ளது. இந்தப் படம் நான்கு கிளைக் கதைகளின் தொகுப்பு. அந்த நான்கு கதைகளும் ஏதோ ஒரு வகையில் ஒரு புள்ளியில் இணைகின்றன. கதைகள்? திருமணமான வேம்பு (சமந்தா) தன் முன்னாள் காதலனை வீட்டுக்கு அழைக்கிறார். இருவரும் உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள். அடுத்த கணம் இறந்துவிடுகிறார் காதலர். அதிர்ச்சியடையும் வேம்பு, தன் கணவனை அழைத்து விஷயத்தைச் சொல்கிறாள். பிணத்தை மறைக்க இருவரும் முயற்சிக்கிறார்கள். நான்கு டீன் ஏஜ் பையன்கள் வீட்டுக்குள்
 

சூப்பர் டீலக்ஸ் – இது படமா… இனி இப்படித்தான் எடுப்பீர்களா?சூப்பர் டீலக்ஸ் படத்தை இந்த கோணத்தில்தான் பார்க்க வேண்டியுள்ளது.

இந்தப் படம் நான்கு கிளைக் கதைகளின் தொகுப்பு. அந்த நான்கு கதைகளும் ஏதோ ஒரு வகையில் ஒரு புள்ளியில் இணைகின்றன.

கதைகள்?

திருமணமான வேம்பு (சமந்தா) தன் முன்னாள் காதலனை வீட்டுக்கு அழைக்கிறார். இருவரும் உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள். அடுத்த கணம் இறந்துவிடுகிறார் காதலர். அதிர்ச்சியடையும் வேம்பு, தன் கணவனை அழைத்து விஷயத்தைச் சொல்கிறாள். பிணத்தை மறைக்க இருவரும் முயற்சிக்கிறார்கள்.

நான்கு டீன் ஏஜ் பையன்கள் வீட்டுக்குள் பலான படம் பார்க்கிறார்கள். அந்தப் பலான படத்தில் வரும் ஒரு நடிகை, படம் பார்க்கும் பையன்களில் ஒருவனுடைய அம்மா. அதிர்ச்சியடைந்த அந்தப் பையன் தாயைக் கொல்ல விரைகிறான். அப்போது அவன் ஒரு சிக்கலில் மாட்டி மருத்துவனையில் சேர வேண்டியதாகிறது.

திருமணம் செய்து ஒரு குழந்தையைக் கொடுத்துவிட்ட ஓடிப் போன விஜய் சேதுபதி, 7 ஆண்டுகள் கழித்து திரும்ப வருகிறார். அவருடைய மகன் ராசுக்குட்டி உள்பட வீடே விஜய் சேதுபதியின் வரவுக்காகக் காத்திருக்க, அவர் ஷில்பா எனும் திருநங்கையாக வந்து சேர்கிறார். அதிர்கிறது வீடு.

சுனாமி அலையில் சிக்கி உயிர்பிழைக்கிறார் மிஷ்கின். காரணம் கையில் அவர் பற்றிக் கொண்ட அந்த சிலை. அந்த கடவுளே காப்பாற்றியதாக நம்பி, அற்புதம் என்ற பெயருடன் கடவுளின் ஊழியர் ஆகிறார். நோய்வாய்ப்பட்ட மனிதர்களைத் தன்னால் குணப்படுத்த முடியும் என நம்புகிறார். ஆனால் உயிருக்குப் போராடும் அவரது சொந்த மகனைக் காப்பாற்ற மருத்துவமனைக்கு

அவருடைய மகன் வயிற்றில் ஸ்குரூ டிரைவர் குத்தி உயிருக்குப் போராடுவதாகத் தகவல் வருகிறது. அவர், தன்னைக் காப்பாற்றிய கடவுள், அற்புதம் நிகழ்த்தி மகனையும் காப்பாற்றுவார் என நம்ப, அவரது மனைவியோ மகனை மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடுகிறார்.

இந்த நான்கு கதைகளும் கெட்ட போலீஸ்காரர் பகவதி பெருமாள் எனும் புள்ளியில் இணைகின்றன.

கதைகளாகப் படிக்கும்போது ‘நல்லாதானே இருக்கு’ என்று கேட்கத் தோன்றினாலும், அதைப் படமாக்கிய விதம், அதற்கான திரைமொழி ரொம்பவே நாற்றமடிக்கிறது. படம் முழுக்க ஆபாச வசனங்கள், காட்சிகள், உடல் மொழி… கொஞ்சம் கூட கூச்ச நாச்சமின்றி காட்சிகளை வைத்திருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா.

இப்படி எடுத்தால்தான் உலக சினிமா என ஒப்புக் கொள்வார்கள் என நம்பும் ஒரு கூட்டத்தைத் திருப்திப்படுத்த எடுத்திருக்கும் படம் போலிருக்கிறது. இந்த மாதிரி படங்கள் இல்லை என யார் தவம் கிடந்தார்கள்?

ஒரு பக்கம் 6 வயது பச்சிளம் பிஞ்சை சிதைக்கிறார்கள்… இன்னொரு பக்கம் 60 வயது மூதாட்டியையும் பாலியல் வன்கொடுமை செய்யும் நாட்டில், மாநிலத்தில் இதுபோன்ற வக்கிரப் படங்கள் தேவையா? ஏ சான்றிதழ் பெற்றுவிட்டதற்காக எதையெல்லாம் காட்ட வேண்டும் என்ற விவஸ்தை இல்லையா?

படத்தில் நடித்த விஜய் சேதுபதி உள்ளிட்ட அத்தனை கலைஞர்களும் சிறப்பாகவே செய்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும், வினோத்தின் ஒளிப்பதிவும் மிகச் சிறந்த மெனக்கெடல்கள்தான். ஆனால் பாரத்தீனியம் செடிக்குப் பாத்தி கட்டி தண்ணீர் விட்ட கதைதான்.

இந்த மாதிரி படங்களை ரசிக்கத் தெரியாவிட்டால், ரசனை இல்லாதவர்கள் என்று சொல்ல ஒரு கூட்டம் தயாராக இருக்கும். அவர்களிடம் கருணையே காட்டாமல் மிதியுங்கள், கூடவே இந்த மாதிரிப் படம் எடுப்பவர்களையும்.

‘இந்த சமூகமே வெந்து தணிந்து, ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மெல்லத் துளிர்த்து ஆரோக்கிய சமூகமாக உருவாக வேண்டும். அவ்வளவு அழுக்கும் கேவலமு்ம் அசிங்கமும் நிறைந்து கிடக்கிறது’. – படம் பார்த்து முடித்த பிறகு மனதில் தோன்றிய எண்ணம் இது.

மதிப்பீடு: 1.0/5.0

 

From around the web