தூத்துக்குடி படுகொலை நினைவேந்தல் ஏற்பாட்டாளார்களுக்கு சம்மன்.. 500 பேர் கூடுவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி!

மதுரை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேருக்கு நினைவேந்தல் பேரணி நடத்த முன்னின்று செயல்படும் ஏற்பாட்டாளர்களுக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 22ம் தேதி அந்த மாபெரும் கொடூர சம்பவம் தூத்துக்குடியில் நடந்தது.இளம் பெண்கள் உட்பட 13 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்து போனவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நினைவேந்தல் கூட்டம், பேரணி நடத்த ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன. அதில் முக்கியமாக பணியாற்றுபவர்களுக்கு
 

 

மதுரை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேருக்கு நினைவேந்தல் பேரணி நடத்த முன்னின்று செயல்படும் ஏற்பாட்டாளர்களுக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளது.
 
கடந்த ஆண்டு மே மாதம் 22ம் தேதி அந்த மாபெரும் கொடூர சம்பவம் தூத்துக்குடியில் நடந்தது.இளம் பெண்கள் உட்பட 13 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்து போனவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நினைவேந்தல் கூட்டம், பேரணி நடத்த ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன. அதில் முக்கியமாக பணியாற்றுபவர்களுக்கு தமிழக அரசு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப் பட்டுள்ளது.
 
விசாரணைக்கு வருமாறும், 6 மாதம் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்காமல் இருப்பேன் என்று உறுதியும் 10 ஆயிரம் ரூபாய்க்கு பிணைப் பத்திரம் கேட்டும் அதில் கூறப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தூத்துக்குடியில் பலியானவர்களுக்கு நினைவேந்தல் நடத்த அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் இறந்து போன க்ளாட்சனின் சகோதரி ஜான் ரோஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.
 
அதில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினர் சார்பில் மே 22ம் தேதி பொதுக் கூட்டம், பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம். பனிமய மாதா கோவிலிருந்து எஸ்ஏவி மைதானம் வரை மாலை 6 மணி முதல் 9:30  மணி வரை பேரணி நடத்த அல்லது மாலை 6 மணி முதல் 8 மணி வரை அந்தோணியார் கோவில் திருமண மண்டபத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது.
 
ஆழ்வார்திருநகரியைச் சார்ந்த வியனரசு தாக்கல் செய்த மனுவில் தூத்துக்குடி பாளையங்கோட்டை மையவாடி பேருந்து நிறுத்தம் அருகே காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை அல்லது எட்டயபுரம் சாலை கலைஞர் அரங்கத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரியிருந்தார்.
 
தனியார் ஓட்டலில் நினைவஞ்சலி நடத்த அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏன் அடுத்தடுத்த மனுக்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 250 பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோருவதாக மனுதாரரக்ள் தரப்பில் கூறப்பட்டது. 
 
“மே 22 ம் தேதி தனியார் ஓட்டலில் காலை 9 மணி முதல் 11 மணி வரை நடக்கும் நினைவஞ்சலி கூட்டத்தில் 500 பேர் கலந்து கொள்ளலாம். இரு தரப்பும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். கலந்து கொள்பவர்களின் விவரங்களை தூத்துக்குடி எஸ்பியிடம் நிகழ்ச்சி முடிந்ததும் வழங்க வேண்டும்,” என்று நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எம். தண்டபாணி உத்தரவிட்டனர்.
 
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழ்நாடு அரசு, அந்த போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் இறந்து போனவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவதற்கு ஏன் கெடுபிடி செய்கிறது என்று தெரியவில்லை.
 

From around the web