ராணுவத்தை வரவழைப்பேன்! டிரம்ப் ஆவேசம்!!

அமெரிக்காவின் மினபொலிஸ் நகரில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு, காவல்துறை கைது நடவடிக்கையின் போது கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் போராட்டம் வெடித்துள்ளது. அமெரிக்காவில் பொதுமுடக்கத்தையும் பொருட்படுத்தாமல் வீதிக்கு வந்து மக்கள் தொடர்ந்து போராடி வருவதால், நிலைமை கைமீறி சென்றுக் கொண்டிருக்கிறது. நியூயார்க்கில் ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக டைம் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு, முழக்கம் எழுப்பியபடி பேரணியாக சென்றனர். தொடர்ந்து வெள்ளை மாளிகை நோக்கி பேரணி
 

ராணுவத்தை வரவழைப்பேன்!  டிரம்ப் ஆவேசம்!!மெரிக்காவின் மினபொலிஸ் நகரில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு, காவல்துறை கைது நடவடிக்கையின் போது கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் போராட்டம் வெடித்துள்ளது.

அமெரிக்காவில் பொதுமுடக்கத்தையும் பொருட்படுத்தாமல் வீதிக்கு வந்து மக்கள் தொடர்ந்து போராடி வருவதால், நிலைமை கைமீறி சென்றுக் கொண்டிருக்கிறது.

நியூயார்க்கில் ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக டைம் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு, முழக்கம் எழுப்பியபடி பேரணியாக சென்றனர். தொடர்ந்து வெள்ளை மாளிகை நோக்கி பேரணி சென்றவர்களை போலீசார் கலைக்க முயன்றதால் கலவரம் வெடித்தது.

போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் தாக்கியும் அனைவரையும் விரட்டியடித்தனர். அதைத்தொடர்ந்து வெள்ளை மாளிகையை சுற்றி செவ்வாய்க்கிழமை வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

நிலைமை கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை அருகே அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவாலயத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் பார்வையிட்டார்.

வார விடுமுறையின் போது நடைபெற்ற கலவரத்தில் இந்த தேவாலயத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்த நிலையில், அதனை அதிபர் ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், இனவெறிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோரை தீவிரவாத அமைப்பாக கருதுவதாகவும், உள்நாட்டு தீவிரவாதத்தை அனுமதிக்க முடியாது என்றும் கூறினார்.

நான் ஆயிரக்கணக்கான ஆயுதம் ஏந்திய படை வீரர்ர்களை ராணுவத்தினர், சட்டம்-ஒழுங்கு அதிகாரிகளை களமிறக்கி கலவரத்தை நிறுத்துவேன். வன்முறையின் போது கடைகள் சூறையாடல், சொத்துக்கு சேதம் விழைவிப்பதை தடுப்பேன்.

இந்த தீவிரவாத செயலை ஒருங்கிணைத்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். நீண்ட கால சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

A1TamilNews.com

From around the web