ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம்! பேராசிரியர்களிடம் தீவிர விசாரணை…

சென்னை: ஐ.ஐ.டி.யில் மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக 3 பேராசிரியர்களிடம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் கடந்த 8ஆம் தேதி ஐ.ஐ.டி. விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இண்டெர்னல் மார்க் குறைவாக எடுத்ததால் பாத்திமா தற்கொலை செய்து கொண்டதாக ஐ.ஐ.டி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பாத்திமாவின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர். இந்த நிலையில் தனது தற்கொலைக்கு 3 பேராசிரியர்களே காரணம்
 

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம்! பேராசிரியர்களிடம் தீவிர விசாரணை…சென்னை: ஐ.ஐ.டி.யில் மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக 3 பேராசிரியர்களிடம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் கடந்த 8ஆம் தேதி ஐ.ஐ.டி. விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இண்டெர்னல் மார்க் குறைவாக எடுத்ததால் பாத்திமா தற்கொலை செய்து கொண்டதாக ஐ.ஐ.டி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பாத்திமாவின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர். இந்த நிலையில் தனது தற்கொலைக்கு 3 பேராசிரியர்களே காரணம் என செல்போனில் பாத்திமா பதிவு செய்து வைத்திருந்த குறிப்பு வெளியானது.

இதனையடுத்து பாத்திமா தற்கொலை வழக்கு கோட்டூர்புரம் காவல்துறையினரிடம் இருந்து மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. கூடுதல் துணை ஆணையர் மெகலினா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பாத்திமா தற்கொலை தொடர்பாக ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் 3 பேரிடம் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். ஐ.ஐ.டி.யில் பாத்திமாவின் செயல்பாடு, தேர்வுகளில் அவர்பெற்ற மதிப்பெண்கள் ஆகியவை குறித்து பேராசிரியர்களிடம் கேட்கப்பட்டதாக தெரிகிறது. பாத்திமாவின் நண்பர்களிடமும் விசாரணை நடத்திய காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளையும் சேகரித்துள்ளனர்.

https://www.A1TamilNews.com

From around the web