வேட்டி கட்டியதால் மோடி தமிழராக முடியாது- சு.திருநாவுக்கரசர்!

வேட்டி கட்டியதால் பிரதமர் மோடி தமிழராகி விட முடியாது. அவர் வேட்டி சட்டை அணிவதால் அனைவருக்கும் சாப்பாடு கிடைத்து விடுமா? ஒரு கோடி பேருக்கு வேலை கிடைத்து விடுமா என்று சு.திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறியதாவது, “நாங்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். மத்தியில் பாஜக மாநிலத்தில் அதிமுக அரசுகளின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
 

வேட்டி கட்டியதால் பிரதமர் மோடி தமிழராகி விட முடியாது. அவர் வேட்டி சட்டை அணிவதால் அனைவருக்கும் சாப்பாடு கிடைத்து விடுமா? ஒரு கோடி பேருக்கு வேலை கிடைத்து விடுமா என்று சு.திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறியதாவது,

“நாங்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். மத்தியில் பாஜக மாநிலத்தில் அதிமுக அரசுகளின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். 

சீன அதிபர் இந்திய பிரதமர் இருவரும் தமிழ்நாட்டுக்கு வந்தது மகிழ்ச்சி. இரண்டு நாள் திருவிழாவாக நடத்தினார்கள். இதனால் என்னென்ன ஒப்பந்தங்கள் கையெழுத்தானது, தமிழகத்திற்கு என்ன நன்மை என்பதை தெளிவு படுத்த வேண்டும். 

பிரதமர் மோடி வேட்டி சட்டை அணிந்து கொண்டு பிரபு, சத்யராஜுக்கு இரண்டு நாட்கள் ஓய்வு கொடுத்து விட்டார். வேட்டி கட்டிவிட்டதாலேயே தமிழனாக முடியாது. நட்சத்திர விடுதியில் உள்ள பீச் ஏற்கனவே சுத்தமாகத் தான் இருந்தது. அங்கே போய் எப்படி குப்பை எடுக்க முடியும்.” என்று கேள்வி எழுப்பியுள்ளார் சு.திருநாவுக்கரசர்.

– வணக்கம் இந்தியா

From around the web