சர்வாதிகாரம் படித்தால் மாணவர்கள் மத்திய அரசை புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்! நடிகர் கமல் காட்டம்!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் அறிவிக்கப்பட்ட தொடர் ஊரடங்கு காரணமாக பள்ளிகள்,கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்வியாண்டு காலம் குறைவாக இருப்பதால் மாணவர்களின் பாடச்சுமையைக் குறைக்கும் பொருட்டு சிபிஎஸ்சி பாடத்திட்டங்களில் சில பாடங்களை குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி குடியுரிமை, மக்களாட்சி உரிமைகள் மற்றும் ஜி.எஸ்டி முதலிய தலைப்புகளிலான பாடங்கள் நீக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து நடிகரும் , மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி ‘மாணவர்களின் மன
 

சர்வாதிகாரம் படித்தால்  மாணவர்கள் மத்திய அரசை புரிந்து கொள்ள வசதியாக  இருக்கும்! நடிகர் கமல் காட்டம்!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் அறிவிக்கப்பட்ட தொடர் ஊரடங்கு காரணமாக பள்ளிகள்,கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கல்வியாண்டு காலம் குறைவாக இருப்பதால் மாணவர்களின் பாடச்சுமையைக் குறைக்கும் பொருட்டு சிபிஎஸ்சி பாடத்திட்டங்களில் சில பாடங்களை குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி குடியுரிமை, மக்களாட்சி உரிமைகள் மற்றும் ஜி.எஸ்டி முதலிய தலைப்புகளிலான பாடங்கள் நீக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகரும் , மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி ‘மாணவர்களின் மன உளைச்சலை தவிர்க்க குடியுரிமை, மக்களாட்சி மற்றும் ஜிஎஸ்டி பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.

சர்வதிகாரி அடால்ப் ஹிட்லரையும், சர்வாதிகாரப்போக்குடன் செயல்பட்டு வந்தவர்களின் வரலாறுகளை படித்தால் போதும். இவர்களது பாடங்களை சேர்க்க சொல்வதன் மூலமாக மத்திய அரசு சர்வதிகார போக்குடன் செயல்பட்டு வருவதை கண்கூடாக உணர்த்துகிறது என மறைமுகமாக மத்திய அரசை சாடி பதிவை வெளியிட்டுள்ளார்.

A1TamilNews.com

From around the web