மகளிர் தினமாம் – வன்கொடுமைகள் நிறுத்த வழி செய்வோமடா!

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் – பாரதியார் இணையத்தளம் முழுவதும் “மகளிர் தின வாழ்த்துகள் சொல்லும்” அன்பர்களே பெண் சிசுக்கொலைகள் இன்னும் உளது – என்ன செய்கிறீர்கள்? விதவை ஆண் திருமணம் செய்தால் சும்மா இருந்து கொண்டு பெண் செய்தால் பழிக்காமல் இருக்கின்றீரா? பெண் ஆணைவிட சிறப்பாக பணி செய்தாலும் ஆணுக்கே ஊதியம் அதிகமாக தருகிறீரே சிறு பிள்ளைகள் முதல் மூதாட்டிகள் வரை பெண்களுக்கு வன்கொடுமைகள் தொடர்ந்து இழைக்கும் போது நீங்கள் என்ன செய்துக்
 

மகளிர் தினமாம் – வன்கொடுமைகள்  நிறுத்த வழி செய்வோமடா!மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
– பாரதியார்

இணையத்தளம் முழுவதும்
“மகளிர் தின வாழ்த்துகள் சொல்லும்”
அன்பர்களே

பெண் சிசுக்கொலைகள் இன்னும்
உளது – என்ன செய்கிறீர்கள்?
விதவை ஆண் திருமணம் செய்தால்
சும்மா இருந்து கொண்டு
பெண் செய்தால் பழிக்காமல் இருக்கின்றீரா?

பெண் ஆணைவிட சிறப்பாக பணி செய்தாலும்
ஆணுக்கே ஊதியம் அதிகமாக தருகிறீரே

சிறு பிள்ளைகள் முதல் மூதாட்டிகள் வரை
பெண்களுக்கு வன்கொடுமைகள் தொடர்ந்து
இழைக்கும் போது நீங்கள் என்ன செய்துக்
கொண்டிருக்கிறீர்கள்?
குறைந்த பட்சம் குரலாவது கொடுக்கிறீரா?
இல்லை, நமக்கென்ன என்று நழுவி விடுகிறீரா?

முகநூலிலோ மற்ற வலைத்தளங்களிலோ
பெண்கள் புகைப்படங்கள் போட்டால்
அவற்றை அனுமதியின்றி எடுத்து
தவறாகப் பயன்படுத்தாமல் இருக்கிறீரா?
இதில் “கவிதை எழுதுகிறோம்” என்றப் பெயரில்
அசிங்கங்களை அரங்கேற்றுவது வேறு
அவற்றிற்கு அகப்பாடல்கள் என விளக்கம் வேறு

“பெண்களுக்கு கல்வி வேண்டும் குடித்தனம் பேணுதற்கே
பெண்களுக்கு கல்வி வேண்டும் மக்களைப் பேணுதற்கே பெண்களுக்கு கல்வி வேண்டும் உலகினை பேணுதற்கே பெண்களுக்கு கல்வி வேண்டும் கல்வியை பேணுதற்கே”
– பாரதிதாசன்

ஆனால்
சாலைகளில் நடந்து போகும்
பெண்களை
பேருந்துகளில் பயணிக்கும்
பெண்களை
ரயில் பெட்டிகளில் உறங்கிக் கொண்டிருக்கும்
பெண்களை
திருவிழாக்களில் பார்க்கும்
பெண்களை
கடைவீதிகளுக்கு பொருள் வாங்கவரும்
பெண்களை
வேலைச் செய்ய அலுவலகம் வரும்
பெண்களை
பள்ளிகளுக்கு, கல்லூரிகளுக்கு
கல்வி கற்கவரும் பெண்களை
நிம்மதியாக நடமாட விடுகிறீர்களா?
பொது இடங்களில் பெண்களிடம்
அத்துமீறாமல் நடக்கிறீர்களா?

முகநூலிலோ, மற்ற வலைதளங்களிலோ
பெண்கள் இருந்தால்
உடனே நட்பு அழைப்பு கொடுத்து
உள்டப்பியில் ஓடிவந்து காமக்கடை
திறக்காமல்
கண்ணியமாக கடந்து போகிறீர்களா?

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டீரோ!”
-பாரதியார்

பெண்கள்
எப்படி நடக்க வேண்டும்
அவர்கள்
என்ன உடுத்த வேண்டும்
அவர்கள் என்னென்னச் சேவைகள்
செய்ய வேண்டும் என்பதோடு
பெண்களுக்கு
அடக்கம், கற்பு, வெட்கம், அமைதி
என என்னவெல்லாம் குணங்கள்
இருக்க வேண்டும் என்று
பட்டியல் போடாமல்
முதலில்
உங்கள்
தன்னொழுக்கத்தை கவனிக்கிறீர்களா?

அரசியலிலோ, போராட்டங்களிலோ ஈடுபடும்
பெண்களின் கருத்துகளுக்கு பதில்களாக
அவர்களின் நடத்தை, கற்பு, உடல், உடை,
உறவுகள் போன்றவற்றை எழுதி
பாலியல் ரீதியாக அருவருக்கும்படி எழுதாமல்
இருக்கிறீர்களா?
அவர்களை கட்டங்கட்டி அடிப்போம் என
அச்சுறுத்தல் செய்வது போன்ற இழிச்செயல்களை
செய்யாமல் இருக்கிறீரா?

நடிகைகள், மாடல்கள், பாடகிகள், நடனக்
கலைஞர்கள் எனத் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற
வாழ்வாதாரம் தேடி வெளியே வரும் பெண்களை
மரியாதையுடன் நடத்துகிறீரா?

பெண்களுக்கு
வேலை தர, வாய்ப்பு தர காமம் கேட்காமல்
விடுகிறீர்களா?

ஏட்டுச் சுரைக்காய் கரிக்கு உதவுமா?
அது போல்
மகளிர் தின வாழ்த்துகளை எழுதி
முகப்புத்தகத்தில் விருப்புகளும்,
பின்னூட்டங்களும் வாங்கிவிட்டு
நடைமுறை வாழ்க்கையில்
பெண்களை இழிவாக நடத்துவது
அவர்களுக்கு விதிமுறைகள் வரைவது
அவர்களைப் போகப் பொருளாக நினைப்பது
அவர்களை வன்கொடுமைகளுக்கு உள்ளாக்குவது
போன்றவை விடுத்து….

நம்மைச் சுற்றி இருக்கும் பெண்களை
நம்மைக் கடந்து போகும் பெண்களை
கண்ணியமாக நடத்துவது,

நாளை
நாம் பெற்ற மகள்கள் வளரும் சமுதாயத்திற்கு
நன்மை பயக்கும் எனச் சிந்திப்போமடா…
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்
நிறுத்த வழிவகைகள் செய்வோமடா…
பின்
“பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா”

-புவனா கருணாகரன், யு.எஸ்.ஏ.

http://www.A1TamilNews.com

From around the web