பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி…! முதலீட்டாளர்கள் பீதி..!

சீனாவில் தொடங்கி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரானோ வைரஸிலிருந்து மக்களை காக்க பல்வேறு நடவடிக்கைகளை அந்தந்த நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. உலகின் பெரும்பாலான நாடுகளில் சந்தைப்படுத்தப்படும் பொருட்களில் சீனாவின் பங்கு கணிசமானது. கொரானோ தாக்கத்தால் சீனா ஸ்தம்பித்துள்ளது. இதன் காரணமாக உலகின் அனைத்து நாட்டுப் பொருளாதாரமும் சீர்குலைந்து இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, விமான போக்குவரத்து தடை,பங்குச் சந்தைகளில் சரிவு என இந்தியப் பொருளாதாரமும் ஆட்டம் காண ஆரம்பித்து இருக்கிறது. வார விடுமுறைக்குப்
 

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி…! முதலீட்டாளர்கள் பீதி..!

சீனாவில் தொடங்கி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரானோ வைரஸிலிருந்து மக்களை காக்க பல்வேறு நடவடிக்கைகளை அந்தந்த நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.

உலகின் பெரும்பாலான நாடுகளில் சந்தைப்படுத்தப்படும் பொருட்களில் சீனாவின் பங்கு கணிசமானது. கொரானோ தாக்கத்தால் சீனா ஸ்தம்பித்துள்ளது. இதன் காரணமாக உலகின் அனைத்து நாட்டுப் பொருளாதாரமும் சீர்குலைந்து இருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, விமான போக்குவரத்து தடை,பங்குச் சந்தைகளில் சரிவு என இந்தியப் பொருளாதாரமும் ஆட்டம் காண ஆரம்பித்து இருக்கிறது.   வார விடுமுறைக்குப் பிறகு இன்று மார்ச் 16காலையில் தொடங்கிய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1800 புள்ளிகளும், நிப்டி 570 புள்ளிகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன.

 மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1836.14 புள்ளிகள் சரிந்து 32,267.34 ஆகவும், நிப்டி 570.90 புள்ளிகள் சரிந்து 9,384.30 ஆகவும் ஆரம்பமாகி இருக்கின்றன. பங்கு சந்தை முதலீட்டாளர்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

http://www.A1TamilNews.com

 

From around the web