சென்னையில் இயக்கப்படும் நீராவி என்ஜின் ரயில்!

சென்னையில் பழமையின் பெருமையைப் பறைசாற்றும் வகையில், 164 ஆண்டுகள் தொன்மையான நீராவி என்ஜின் ரயில் எழும்பூர் – கோடம்பாக்கம் இடையே இயக்கப்படுகிறது. இந்திய ரயில்வேக்கு சொந்தமான இந்த ரயில், நீராவியால் இயங்கும் பழமையான தொழில்நுட்பத்தைக் கொண்டதாகும். இந்த ரயிலில் பயணிக்கும் அனுபவத்தை சென்னை மக்களுக்கு அளிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னை எழும்பூர் – கோடம்பாக்கம் ரயில் நிலையங்கள் இடையே நீராவி என்ஜின் ரயில் காலை 11 மணிக்கு தனது முதல் பயணத்தைத் தொடங்கியது.
 

சென்னையில் இயக்கப்படும் நீராவி என்ஜின் ரயில்!சென்னையில் பழமையின் பெருமையைப் பறைசாற்றும் வகையில், 164 ஆண்டுகள் தொன்மையான நீராவி என்ஜின் ரயில் எழும்பூர் – கோடம்பாக்கம் இடையே இயக்கப்படுகிறது.

இந்திய ரயில்வேக்கு சொந்தமான இந்த ரயில், நீராவியால் இயங்கும் பழமையான தொழில்நுட்பத்தைக் கொண்டதாகும். இந்த ரயிலில் பயணிக்கும் அனுபவத்தை சென்னை மக்களுக்கு அளிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னை எழும்பூர் – கோடம்பாக்கம் ரயில் நிலையங்கள் இடையே நீராவி என்ஜின் ரயில் காலை 11 மணிக்கு தனது முதல் பயணத்தைத் தொடங்கியது.

இவ்விரு ரயில் நிலையங்கள் இடையே தினசரி 4 முறை இந்த ரயில் இயக்கப்படுகிறது. நீராவி என்ஜின் ரயிலில் பயணிக்க பெரியவர்களுக்கு 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறியவர்களுக்கு 300 ரூபாய் கட்டணம். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு வழிக்கட்டணம் ஆயிரம் ரூபாய் என்றும், இருவழிக்கட்டணம் எனில் ஆயிரத்து 500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீராவி என்ஜின் ரயிலுக்காக எழும்பூர் ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

https://www.A1TamilNews.com

 

 

From around the web