10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரசு வெளியிட்ட வழிகாட்டுதல்கள்!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருக்கும் தொடர் ஊரடங்கால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. ஜூன் 1 ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த 10 ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மீண்டும் ஜூன் 15 ம் தேதி முதல் 25 ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என
 

10ம் வகுப்பு  பொதுத்தேர்வு  எழுதும் மாணவர்களுக்கு அரசு வெளியிட்ட வழிகாட்டுதல்கள்!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருக்கும் தொடர் ஊரடங்கால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

ஜூன் 1 ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த 10 ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மீண்டும் ஜூன் 15 ம் தேதி முதல் 25 ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என உயர்மட்ட அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனைகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச முகக்கவசங்கள் வழங்கப்படும் எனவும், வெளியூரில் இருந்து தேர்வு எழுத வரும் மாணவர்கள் தனி அறையில் அமர வைக்கப்படுவார்கள்.

மாணவர் விடுதிகள் தேர்வுக் காலங்களில் திறந்து வைக்கப்பட்டிருக்கும். வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள் நேரடியாக தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் உள்ள தேர்வு மையங்களிலும் தேர்வினை எழுதிக் கொள்ள முடியும்.

தேர்வுப்பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்கள் தேர்வு முடியும் வரை பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்பது போன்ற ஆலோசனைகளை பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web