சில கைதுகளுடன் தப்பிவிட முடியாது! குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்!! மு.க.ஸ்டாலின் ஆணித்தரம்!!

சில கைதுகளுடன் தப்பிவிடலாம் என்று அரசு தப்புக்கணக்கு போடக் கூடாது. இனி தான் கடமை தொடங்குகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் கொலை வழக்காக மாற்றப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் 4 காவலர்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டு தேடப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ”சாத்தான்குளம் கொலையில் சம்மந்தப்பட்டவர்களை காப்பாற்ற தமிழக அரசுகள் எடுத்த முயற்சிகள் தவிடு பொடியாக்கப்பட்டு
 

சில கைதுகளுடன் தப்பிவிட முடியாது! குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்!! மு.க.ஸ்டாலின் ஆணித்தரம்!!சில கைதுகளுடன் தப்பிவிடலாம் என்று அரசு தப்புக்கணக்கு போடக் கூடாது. இனி தான் கடமை தொடங்குகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் கொலை வழக்காக மாற்றப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் 4 காவலர்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டு தேடப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

”சாத்தான்குளம் கொலையில் சம்மந்தப்பட்டவர்களை காப்பாற்ற தமிழக அரசுகள் எடுத்த முயற்சிகள் தவிடு பொடியாக்கப்பட்டு கொலை செய்தவர்கள், நீதிமன்றத்தின் தலையீட்டினால் சட்டத்தின் முன் வளைக்கப்பட்டதை வரவேற்கிறேன்.

குடும்பத்தின் கண்ணீர், மக்கள் போராட்டம், கடையடைப்பு, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள், நீதிமன்றம், ஊடகங்கள் என அனைத்து தரப்பினரால சுற்றி வளைக்கப்பட்டு அதிமுக அரசு சிக்கிக் கொண்டது.

தமிழக அரசு தொடக்கத்திலிருந்தே கொலையை மறைக்க முயற்சித்தது. மூச்சுத்திணறி, உடல்நலமில்லாமல் இறந்தார்கள் என்று முதலமைச்சர் தீர்ப்பு எழுதினார். அரசு வழக்கறிஞர் பூசி மெழுகினார். இது லாக்கப் மரணமே இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு சொன்னார்.

போலீசார் நீதிபதியை மிரட்டினர். தலைமைக் காவலர் ரேவதி மிரட்டப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆதாரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. மேலிடத்தின் உதவி இல்லாமல் சாதாரண போலீஸ்காரர்களால் இவ்வளவும் செய்திருக்க முடியுமா?

சில கைதுகளை செய்துவிட்டு அனைவரது வாயையும் முடிவிட்டோம் என்று தமிழக அரசு தப்புக் கணக்கு போடக்கூடாது. அனைத்து தரப்பினரும் கண்காணித்துக் கொண்டு தான் இருப்பார்கள். கொலைக்கு காரணமான அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலிசை சேர்ந்தவர்களும் விசாரிக்கப்பட வேண்டும். முதலமைச்சரின் கடமை முடிந்துவிட வில்லை. இப்போது தான் தொடங்கியிருகிறது,” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

நேற்று சமூக ஊடகங்களில் ரஜினியின் ட்வீட் ஆக்கிரமித்து கொண்டிருந்த நிலையில், சாத்தான்குளம் சம்பவங்களை சுருக்கமாகவும், அடுத்து என்ன செய்யவேண்டும் என்றும் ஆணித்தரமாக கூறியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்.

A1TamilNews.com

 

From around the web