இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்குங்கள்! மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!!

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் அவசர தேவைகளுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்காக இ-பாஸ் முறையை அமல் படுத்தியது தமிழக அரசு. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாகவும், சாமானிய மக்கள் மிகவும் அவதிப்படுவதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். இந்நிலையில் இ-பாஸ் முறையில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது, “இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்கவே
 
இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்குங்கள்! மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!!கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் அவசர தேவைகளுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்காக இ-பாஸ் முறையை அமல் படுத்தியது தமிழக அரசு.
 
இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாகவும், சாமானிய மக்கள் மிகவும் அவதிப்படுவதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். இந்நிலையில் இ-பாஸ் முறையில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
இது குறித்து மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது,
 
“இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்கவே நான் வலியுறுத்தி வந்தேன்.எளிய மக்களுக்கு அதற்கு விண்ணப்பிப்பதற்கே அதிக சிரமம் உள்ளது. எனவே இப்போதும் அம்முறையை முழுமையாக அகற்றுங்கள் என்றே வலியுறுத்துகிறேன்.
 
அதேநேரத்தில் இத்தளர்வை மிக மிக அவசியமான பயணங்களுக்கு மட்டும் பயன்படுத்தி கவனமாக இருக்க வேண்டுமென பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன்,” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

From around the web