அடுத்தவர் குழந்தைக்கு பெயர் வைக்கும் அதிமுக! – மு.க.ஸ்டாலின் சாடல்..

உள்ளாட்சி தேர்தலில் திமுகவினரின் வெற்றியை அதிமுக அரசு தட்டிப் பறித்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.குற்றம் சாட்டியுள்ளனர். 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட மற்றும் ஒன்றிய உறுப்பினர்களுக்கான போட்டியில் அதிமுகவை விட கூடுதல் இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. பல இடங்களில் அதிகாரிகளின் துணையுடன், தங்களுடைய வெற்றியை அதிமுகவுக்கு சாதகமாக மாற்றி அறிவித்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர் திமுகவினர். உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பற்றி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், யார் பெற்ற பிள்ளைக்கோ பெயர்
 

அடுத்தவர் குழந்தைக்கு பெயர் வைக்கும் அதிமுக! – மு.க.ஸ்டாலின் சாடல்..ள்ளாட்சி தேர்தலில் திமுகவினரின் வெற்றியை அதிமுக அரசு தட்டிப் பறித்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.குற்றம் சாட்டியுள்ளனர்.

27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட மற்றும் ஒன்றிய உறுப்பினர்களுக்கான போட்டியில் அதிமுகவை விட கூடுதல் இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. பல இடங்களில் அதிகாரிகளின் துணையுடன், தங்களுடைய வெற்றியை அதிமுகவுக்கு சாதகமாக மாற்றி அறிவித்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர் திமுகவினர்.

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பற்றி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், யார் பெற்ற பிள்ளைக்கோ பெயர் வைத்துக் கொள்வது போல், திமுகவினரின் வெற்றியை தங்கள் வெற்றியாக காட்டிக் கொண்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அவருடைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

“தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களைத் தவிர்த்து, மீதமுள்ள 27 மாவட்டங்களில் 14 மாவட்டங்களில் தி.மு.கழக கூட்டணியே வெற்றி பெற்றிருக்கிறது. எஞ்சிய 13 மாவட்டங்கள் பலவற்றிலும் தி.மு.க கூட்டணியின் வெற்றி குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. அதுபோலவே, தேர்தல் நடைபெற்ற 314 ஒன்றியங்களில் உள்ள 5ஆயிரத்து 90 வார்டு உறுப்பினர்களுக்கான இடங்களில் தி.மு.க கூட்டணி 2ஆயிரத்து 356 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் காரணமாக, ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளிலும் தி.மு.கழக கூட்டணியே அதிக இடங்களைப் பிடிக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது.

ஆளுங்கட்சியும் மாநிலத் தேர்தல் ஆணையமும் காவல்துறையும் கைகோர்த்துக் கொண்டு தேர்தல் விதிகளுக்குப் புறம்பாக மும்முனைத் தாக்குதல் நடத்திய நிலையிலும், தி.மு.கவுக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் கிடைத்துள்ள இந்த வெற்றியின் அளவு மகத்தானது. இன்னும் அதிகமான இடங்களில் கழகக் கூட்டணி பெற வேண்டிய வெற்றியினை ஆளுந்தரப்பு தன் அதிகார பலத்தாலும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளாலும் தட்டிப்பறித்துள்ளது. யார் பெற்ற குழந்தைக்கோ, தான் பெயர் வைப்பதுபோல நாம் பெற்ற வெற்றிகள் பலவற்றைக் கொஞ்சமும் கூச்சமில்லாமல், தங்களுடையதாகக் காட்டிக் கொண்டுள்ளது அவமானமிகு அ.தி.மு.க.” என்று குறிப்பிட்டுள்ளார்.

http://www.vanakamindia.com

From around the web