இன்று வெளியாகும் யசோதா! ஸ்ரீப்ரியா இயக்கியுள்ள குறும்படம்!!

ஊரடங்கு உத்தரவால் திரையுலகமே ஒட்டு மொத்தமாக முடங்கிப் போயுள்ள நிலையில், நடிகர் நடிகைகள் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மூலம் தங்களுடைய அன்றாட வாழ்வு, உடற்பயிற்சிகளை, வீடியோக்கள், படங்கள் மூலமாக பகிர்ந்து வருகிறார்கள். பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் , ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மம்முட்டி, மோகன்லால், சிவராஜ்குமார் என தென்னிந்திய நடிகர்களையும், பெங்காலி, போஜ்புரி, பஞ்சாபி நடிகர் நடிகைகளையும் சேர்த்து ஃபேமிலி என்ற குறும்படம் வெளியானது. தற்போது நடிகையும் இயக்குனருமான ஸ்ரீப்ரியா யசோதா என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். நாசரும்
 

இன்று வெளியாகும் யசோதா! ஸ்ரீப்ரியா இயக்கியுள்ள குறும்படம்!!ஊரடங்கு உத்தரவால் திரையுலகமே ஒட்டு மொத்தமாக முடங்கிப் போயுள்ள நிலையில், நடிகர் நடிகைகள் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மூலம் தங்களுடைய அன்றாட வாழ்வு, உடற்பயிற்சிகளை, வீடியோக்கள், படங்கள் மூலமாக பகிர்ந்து வருகிறார்கள்.

பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் , ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மம்முட்டி, மோகன்லால், சிவராஜ்குமார் என தென்னிந்திய நடிகர்களையும், பெங்காலி, போஜ்புரி, பஞ்சாபி நடிகர் நடிகைகளையும் சேர்த்து ஃபேமிலி என்ற குறும்படம் வெளியானது. 

தற்போது நடிகையும் இயக்குனருமான ஸ்ரீப்ரியா யசோதா என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். நாசரும் ஸ்ரீப்ரியாவும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமூக இடைவெளியைப் பின்பற்றி  செல்போன் கேமிரா மூலமாகவே படம்பிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்-ஐ மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டு இருந்தார். ஸ்ரீப்ரியாவும் மக்கள் நீதி மய்யத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். மக்கள் நீதி மய்யத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள மற்றோருவரான கமீலா நாசரும் ஸ்ரீப்ரியாவும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.

இன்று மாலை யூடியூபில் வெளியாகிறது யசோதா!

A1TamilNews.com

From around the web