கொரோனா ஒழிப்பு! இலங்கையில் ஊரடங்கு ரத்து!!

கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை இலங்கை அரசு ரத்து செய்துள்ளது. இலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 பேர் மட்டுமே. 2 ஆயிரத்து 34 பேர்கள் மட்டுமே கொரோனாவினால் இலங்கையில் பாதிக்கப்பட்டனர். மார்ச் 20ம் தேதி முதல், அதாவது இந்தியாவுக்கு சில நாட்களுக்கு முன்னர் தான் இலங்கையில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. ஒரு மாதத்திற்கும் மேலாக 24 மணி நேரமும் ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டது. ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு இரவு நேரத்தில் மட்டுமே
 

கொரோனா ஒழிப்பு! இலங்கையில் ஊரடங்கு ரத்து!!கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை இலங்கை அரசு ரத்து செய்துள்ளது. இலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 பேர் மட்டுமே.  2 ஆயிரத்து 34 பேர்கள் மட்டுமே கொரோனாவினால் இலங்கையில் பாதிக்கப்பட்டனர்.

மார்ச் 20ம் தேதி முதல், அதாவது இந்தியாவுக்கு சில நாட்களுக்கு முன்னர் தான் இலங்கையில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. ஒரு மாதத்திற்கும் மேலாக 24 மணி நேரமும் ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டது.

ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு இரவு நேரத்தில் மட்டுமே அமல்படுத்தப்பட்டது. ஜூன் 13ம் தேதி முதல் நள்ளிரவு முதல் அதிகாலை 4 மணி வரையில் தான் ஊரடங்கு இருந்தது. தற்போது அதையும் நீக்கிவிட்டு, இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது இலங்கை.

சமூகப்பரவலை கட்டுப்படுத்தியதால், கொரோனா பரவலை தடுக்க முடிந்தது என்று இலங்கை சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடைசியாக கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு நோயாளிகளுக்கு தொற்று ஏற்பட்ட தொடர்புகளை கண்டுபிடித்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்கள்.

இந்தியாவுக்கு சில நாட்கள் முன்னதாக ஊரடங்கு அமல்படுத்திய இலங்கையில் இன்று ஊரடங்கு முற்றிலுமாக நீக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர். முகக்கவசம் அணிந்து செல்வதற்கு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவல் தொடங்கியதும், பன்னாட்டு விமான சேவையை நிறுத்திய இலங்கை அரசு, எதிர்க்கட்சிகளுடனும் சேர்ந்து கூட்டாக விவாதித்து முடிவெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com

 

From around the web