36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட யாழ்ப்பாணம் விமான நிலையம்!

விடுதலைப்புலிகளுடனான போர் காரணமாக மூடப்பட்ட இலங்கை யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பலாலி விமான நிலையம். 2 ஆம் உலகப் போரின் போது பிரிட்டனின் வான்படையின் பயன்பாட்டுக்காக நிர்மாணிக்கப்பட்டது பலாலி விமான நிலையம். போருக்குப் பின்னர், விமான நிலையத்தை கைப்பற்றியது இலங்கையின் விமானப்படை. அதி உயர் பாதுகாப்பில் இருந்த பலாலி விமான நிலையத்திலிருந்து விமான சேவை நடைபெற்று வந்தது. விடுதலைப்
 

36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட யாழ்ப்பாணம் விமான நிலையம்!விடுதலைப்புலிகளுடனான போர் காரணமாக மூடப்பட்ட இலங்கை யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பலாலி விமான நிலையம். 2 ஆம் உலகப் போரின் போது பிரிட்டனின் வான்படையின் பயன்பாட்டுக்காக நிர்மாணிக்கப்பட்டது பலாலி விமான நிலையம். போருக்குப் பின்னர், விமான நிலையத்தை கைப்பற்றியது இலங்கையின் விமானப்படை.

அதி உயர் பாதுகாப்பில் இருந்த பலாலி விமான நிலையத்திலிருந்து விமான சேவை நடைபெற்று வந்தது. விடுதலைப் புலிகளுடனான போர் தொடங்கிய நிலையில், பயணிகள் சேவை நிறுத்தப்பட்டு, ராணு‌வ பயன்பாட்டுக்கு மட்டுமே விமான நிலையம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த நிலையில், பலாலி விமான நிலையத்தை மேம்படுத்தும் பணி நடைபெற்று வந்தது. அது நிறைவடைந்த நிலையில், இன்று விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது. அதிபர் சிறிசேனாவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் திறப்பு விழாவில் பங்கேற்றனர்.

36 ஆண்டுகளுக்குப் பி‌றகு விமான நிலையம் திறக்கபட்ட நிலையில், முதல் விமானமாக சென்னையில் இருந்து செல்லும் அலையன்ஸ் விமானம் தரையிறங்கியது. அந்த விமானத்திற்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் வாட்டர் சல்யூட் எனப்படும் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அதில், இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வந்தடைந்தனர்.

இலங்கையின் 3-வது சர்வதேச விமான நிலையமான பலாலியிலிருந்து, முதல் கட்டமாக வாரத்தில் 3 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து விமான சேவை இயக்கப்படுகிறது.

From around the web