அதிர்ச்சி வீடியோ! களத்திலேயே உயிரிழந்த இளம் வீரர்..! விளையாடிய போது நேர்ந்த சோகம்!

 
Ivory coast

ஐவரி கோஸ்ட் கால்பந்து வீரர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் மாதம் 5-ம் தேதி ஒரு போட்டியின் போது மைதானத்தில் திடீரென கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐவரி கோஸ்ட் நாட்டில் அபிட்ஜான் மைதானத்தில் உள்ளூர் கிளப் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டில் அந்நாட்டை சேர்ந்த 21 வயதான கால்பந்து வீரர் முஸ்தபா சைல்லா ரேசிங் கிளப் அணிக்காக விளையாடி வந்தார்.

Ivory coast

இந்த நிலையில், கோல் போஸ்ட் அருகில் விளையாடிக் கொண்டிருந்த முஸ்தபா சைல்லா திடீரென மைதானத்திலே கிழே சரிந்து விழுந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் முஸ்தபா சைல்லா மாரடைப்பால் உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த வீரருக்கு வயது 21 ஆகும். கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் திடீரென கீழே விழுந்து கால்பந்து வீரர் உயிரிழந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், கால்பந்து வீரர் சைல்லா முதலில் தடுமாறி தரையில் விழுந்ததைக் பார்க்க முடிகிறது. மேலும்,  “21 வயதான சைல்லா  கால்பந்து விளையாடும் போது திடீரென இறந்தார். அவரது மரணத்திற்கு காரணம் மாரடைப்பு” என்று ட்விட்டர் பதிவின் தலைப்பில் கூறப்பட்டுள்ளது. 


ட்விட்டரில், ஒருவர்  சைல்லாவின் மறைவை உறுதிப்படுத்தினார். “எங்கள் அணியின் முஸ்தபா சைல்லா இன்று (மார்ச் 5) மாலை ஆடுகளத்தில் திடீரென இறந்தார். நிர்வாகம் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை அனுப்புகிறது. ஓய்வெடு முஸ்தபா. ஓய்வெடு முஸ்தபா” என்று கால்பந்து கிளப் பிரெஞ்சு மொழியில் தனது இரங்கலை தெரிவித்துள்ளது.

From around the web