ராகுல் ட்ராவிட் வீசிய பந்துக்கு கிரிக்கெட் விளையாடிய முதல்வர் இபிஎஸ்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராகுல் ட்ராவிட் வீசிய பந்தை விளாசினார். சேலம் அருகே வாழப்பாடியில் உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானத்தை முதலமைச்சர் ராகுல் ட்ராவிட் வீசிய முதல் பந்தை எதிர்கொண்டு திறந்து வைத்தார். கிராமப்புறங்களிலிருந்து வரும் கிரிக்கெட் வீரர்களை ஊக்கப்படுத்துவதற்காக இத்தகைய கிரிக்கெட் மைதானங்கள் உருவாக்கப்படுவதாக முதலமைச்சர் கூறினார். விழாவில் பங்கேற்றுப் பேசிய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிட், இனி கிராமப் புறங்களிலிருந்தும் உலகப் போட்டியில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்கள் உருவாகுவார்கள். அரசின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது
 

ராகுல் ட்ராவிட் வீசிய பந்துக்கு கிரிக்கெட் விளையாடிய  முதல்வர் இபிஎஸ்!முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராகுல் ட்ராவிட் வீசிய பந்தை விளாசினார். சேலம் அருகே வாழப்பாடியில் உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானத்தை முதலமைச்சர் ராகுல் ட்ராவிட் வீசிய முதல் பந்தை எதிர்கொண்டு திறந்து வைத்தார்.

கிராமப்புறங்களிலிருந்து வரும் கிரிக்கெட் வீரர்களை ஊக்கப்படுத்துவதற்காக இத்தகைய கிரிக்கெட் மைதானங்கள் உருவாக்கப்படுவதாக முதலமைச்சர் கூறினார்.

விழாவில் பங்கேற்றுப் பேசிய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிட், இனி கிராமப் புறங்களிலிருந்தும் உலகப் போட்டியில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்கள் உருவாகுவார்கள். அரசின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது என்றார்.

ஐசிசி முன்னாள் தலைவர் ஶ்ரீனிவாசன், அடுத்த ஆண்டு, இந்த மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறும். தோனி விளையாடுவார். முதல்வர் அதைப் பார்வையிடுவார் என்றார்

நிகழ்ச்சியில்  அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, உதயகுமார், பெஞ்சமின்  மற்றும் அதிகாரிகள்  கலந்துகொண்டார்கள். 

https://www.A1TamilNews.com

From around the web