தீபக் சாஹர் வீசிய காதல் பந்தில் கிளீன் போல்ட் ஆன தோழி..! வைரல் வீடியோ

 
Deepak-Chahar

சென்னை அணியின் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் தனது தோழியிடம் காதலை வெளிப்படுத்திய காணொலி இணையத்தில் வைரலானது.

14-வது ஐபிஎல்-ன் இரண்டாவது பாதி போட்டிகள் ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற்று வருகிறது. துபாயில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆட்டம் முடிந்ததும் பார்வையாளர் மாடத்தில் நின்று கொண்டிருந்த தனது தோழியை சந்தித்து தீபக் சாஹர் காதலை தெரிவித்தார்.

அவரது தோழி காதலை ஏற்றுக் கொள்ளவே, இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். சுற்றி இருந்தவர்கள் கரகோஷம் எழுப்பி காதல் ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

A post shared by Deepak Chahar (@deepak_chahar9)

போட்டியில் சென்னை அணி தோற்றாலும், காதலியின் மனதை தீபக் சாஹர் வென்று விட்டதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் தீபக் சாஹருக்கும் அவரது காதலிக்கும் கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர்.

From around the web