இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்.. 19 வயதான பளுதூக்கும் வீரர் ஜெர்மி தங்கம் வென்று சாதனை!!

 
jeremy

காமன்வெல்த் போட்டியில் இன்று நடைபெற்ற பளுதூக்குதலில் 67 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ஜெர்மி லால்ரினுங்கா தங்கப்பதக்கம் வென்றார்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்களும், வீராங்கனைகளும் இந்த விளையாட்டு தொடரில் பங்கேற்றுள்ளனர். 20 விளையாட்டுகளில் சுமார் 283 ஈவெண்டுகள் நடைபெற உள்ளது.

common-wealth

இந்தியாவை சார்ந்த 111 வீரர்கள் மற்றும் 104 வீராங்கனைகள் என மொத்தம் 215 பேர் 16 விதமான விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்கின்றனர். தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, கிரிக்கெட், சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹாக்கி, ஜூடோ, லான் பவுல்ஸ், பாரா பவர்லிப்டிங், ஸ்குவாஷ், நீச்சல், டேபிள் டென்னிஸ், டிரையத்லான், பளுதூக்குதல், மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளில் இந்த முறை இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் இன்று 67 கிலோ எடை தூக்கும் பிரிவில் பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் 19 வயதான ஜெர்மி லால்ரினுங்கா என்ற இளவயது வீரர் பங்கேற்றார். ஜெர்மிலால் ரினுங்கா போட்டி தொடங்கியது முதலே ஆதிக்கம் செலுத்தினார்.

commonwealth

போட்டி தொடங்கியது முதலே இந்திய வீரர் லால்ரினுங்காவிற்கும், சமோவா நாட்டின் வீரருக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. ஆனாலும், இந்திய வீரர் ஜெரிமி ஆதிக்கம் செலுத்தினார். இதனால், தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கான இரண்டாவது தங்கத்தை வென்று அசத்தினார்.

From around the web