உடலுக்கு இரும்புச்சத்தை அள்ளிக் கொடுக்கும் கேழ்வரகு மிளகு தோசை!

உலகம் முழுவதும் கொரோனா மிரட்டிக் கொண்டிருக்கும் வேளையில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதும், இயற்கையாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதும் மட்டுமே நோய் தொற்றிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள ஒரே வழி. மருந்து, மாத்திரைகளை எதிர்ப்பு சக்திக்காக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. நம் பாரம்பரிய உணவான கேழ்வரகிலேயே ஏராளமான இரும்புச் சத்து கொட்டிக் கிடக்கிறது. இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கேழ்வரகு மிளகு தோசை தேவையான பொருட்கள்: கேழ்வரகு
 

உடலுக்கு இரும்புச்சத்தை அள்ளிக் கொடுக்கும்  கேழ்வரகு மிளகு தோசை!லகம் முழுவதும் கொரோனா மிரட்டிக் கொண்டிருக்கும் வேளையில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதும், இயற்கையாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதும் மட்டுமே நோய் தொற்றிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள ஒரே வழி.

மருந்து, மாத்திரைகளை எதிர்ப்பு சக்திக்காக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. நம் பாரம்பரிய உணவான கேழ்வரகிலேயே ஏராளமான இரும்புச் சத்து கொட்டிக் கிடக்கிறது. இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கேழ்வரகு மிளகு தோசை

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு –300கி
கோதுமை மாவு – 150கி
சின்ன வெங்காயம் – 100கி
கறிவேப்பிலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 1
சீரகம் – 1 ஸ்பூன்
தயிர்-1கப்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் அல்லது மோர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். மோர் சேர்ப்பதால் புளிக்க வைக்கத் தேவையில்லை.

தோசைக்கல்லில் எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி இருபுறமும் வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து சூடாகப் பரிமாறலாம். உடலுக்கு ஆரோக்கியமான சுவையான கேழ்வரகு மிளகு தோசை தயார்.

A1TamilNews.com

From around the web